Dailyhunt
தவெக வெற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் ஸ்கேமும்.. மாரிதாஸ் சொன்ன முக்கியமான பாயிண்ட்

தவெக வெற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் ஸ்கேமும்.. மாரிதாஸ் சொன்ன முக்கியமான பாயிண்ட்

Samayam Tamil 5 days ago

ட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 108 எம்எல்ஏக்கள் பெற்றுள்ள விஜய்யின் தவெக இன்னமும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.

பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், பிற கட்சிகளின் ஆதரவினை தவெக கோரி கொண்டிருக்கிறது. இந்நிலையில் யூடிப்பர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளத்தில் தவெக ஆட்சி அமைப்பது குறித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

மாரிதாஸ் எழுப்பிய சந்தேகம்
அதாவது நேற்று இரவில் இருந்து திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதில் 0.0001% உண்மை இல்லை என தெரிவித்துள்ளார் மாரிதாஸ். அதோடு இந்த போலி செய்தியை சோஷியல் மீடியா மூலமாக மக்கள் மற்றும் செய்தி நிறுவனங்களை இந்தளவுக்கு குழப்ப முடியும் என்றால், யார் உத்தரவில் இதனை செய்தார்கள் என்று யோசியுங்கள் என தெரிவித்துள்ளார். அதன் வாயிலாக இந்த தேர்தலில் தவெக வெற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் ஸ்கேமும் என்ன என்பது புரியும்.

அடுத்த ஸ்கேமுக்கு தயார்
அடுத்ததாக நான் சிஎம்மாக மக்கள் வாய்ப்பு கொடுத்தும் இந்த கட்சிகள் தடுத்துட்டாங்க என்று அடுத்த ஸ்கேமுக்கு தயாராகி வருகிறார்கள். இதனை பத்து வயது குழந்தை கூட அழுது கொண்டு நாளை மீண்டும் வீட்டில் ஓட்டு கேட்கும். அவர்களுக்காக பெரியவர்களும் ஒரு ஓட்டு என்று போடுவார்கள். ஆனால் அரசியலில் எதுவும் செய்து ஆட்சியை பிடிக்க என்று இருக்கும் போது இந்த முயற்சி TVK தரப்பில் தவறு ஒன்றும் இல்லை.

குழந்தைகளிடம் கருத்துக்கணிப்பு
ஆனால் இது ஸ்கேம் என தெரிவித்துள்ளார் மாரிதாஸ். மேலும் எக்ஸிட் போல் அல்லது தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் இனி என்ன சொல்லி குழந்தை அழுகிறது என்தையும் சேர்த்து கொள்ளுங்கள். அவர்களுடைய அழுகைக்கு பெற்றோர்கள் அதன் தாத்தா, பாட்டி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சர்வே எடுத்து போடுங்கள். ஏனென்றால் அங்கே தான் எல்லாமே ஆரம்பித்துள்ளது. இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் மாரிதாஸ்.

போலி செய்தி
முன்னதாக நேற்றைய தினம் திடீரென திமுக, அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளதாக திடீரென போலி செய்திகள் வெளியானது. ஊடகத்தில் இதுக்குறித்து பேசும் அளவுக்கு சோஷியல் மீடியாவில் இதனை பரப்பினார்கள். சினிமா இன்ப்ளுயன்சர்களும் ஒரே மாதிரியாக திமுக, அதிமுக கூட்டணி அமைக்கவுள்ளதாக பதிவிட்டனர். இது அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பிய நிலையில், இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
அதோடு இப்படி ஒரு செய்தியை தற்போது வேண்டுமென்று பரப்புவதற்கு என்ன காரணம் என்ற கேள்விகளும் எழுந்தது. இதனிடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக ஆட்சி அமைப்பதற்கு எந்த இடையூறும் திமுக தராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நெருக்கடி கொடுப்பதையோ, மற்றொரு தேர்தலை திமுக விரும்பவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil