Dailyhunt
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.. இணைந்தே முடிவெடுப்போம்.. திருமாவளவன்

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.. இணைந்தே முடிவெடுப்போம்.. திருமாவளவன்

Samayam Tamil 4 days ago

ட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு இந்து சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் மாலை அணிவப்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வந்திருந்தார்.

அவருடன் சிபிஎம் மாநில பொது செயலாளர் மற்றும் சிபிஐ தலைவர் ஆகியோர் வந்திருந்தேன். இந்நிலையில் திருமாவளவனிடம் அங்குள்ள செய்தியாளர்கள் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அழிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

தவெகவுக்கு ஆதரவு
அதற்கு பதிலளித்த திருமாவளவன், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நீண்ட காலமாக மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்தே பயணித்தே வருகிறோம். எதிர்காலத்தில் முக்கியமான முடிவுகளை இணைந்தே எடுப்போம். தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு என நீங்கள் எழுப்பிய கேள்வி குறித்து நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை. எதுவும் முடிவெடுக்கவில்லை என பதில் அளித்துள்ளார்.

பொறுத்திருந்து பார்க்கலாம்
அதோடு இதுவரை இல்லாத அளவுக்கு தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது. இந்த நிலை குறித்து என்ன நினைக்கிறீங்க என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், பொறுத்திருந்து பார்ப்போம். உங்களை மாதிரி தான் நாங்களும் குழப்பத்தில் இருக்கிறோம் என பதிலளித்துள்ளார். இதனிடையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி
மற்றொரு பக்கம் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் சிபிஎம் 2, சிபிஐ 2 ,மற்றும் ஐயூஎம்எல் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து விஜய்க்கு ஆட்சி அமைக்க இவர்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டியது.

காங்கிரஸ் ஆதரவு
தேர்தலுக்கு பின்பாகவும் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதோடு நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொலைப்பேசி வாயிலாக விஜய்க்கு வாழ்த்தும் தெரிவித்தார். இதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்துடன் விஜய் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக விசிக தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் அறிக்கை
இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மிகவும் நுட்பமான அரசியலை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பாகவே கூட்டணி ஆட்சி என்பதை விசிக அழுத்தம் திருத்தமாக முன்மொழிந்தது. அதனை தற்போது வெகுமக்களும் வழிமொழிந்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்பதை ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கணித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த கருத்து அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. ஆட்சியில் பங்கு வழங்கினால் தமிழக வெற்றி கழகத்துடன் திருமாவளவன் செல்வாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனிடையில் தற்போது தவெகவுக்கு ஆதரவளிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil