Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தெலுங்கு இயக்குநர் சந்தோஷை திருமணம் செய்த சுப்ரமணியபுரம் ஸ்வாதி ரெட்டி

தெலுங்கு இயக்குநர் சந்தோஷை திருமணம் செய்த சுப்ரமணியபுரம் ஸ்வாதி ரெட்டி

Samayam Tamil 2 weeks ago

ஸ்வாதி, சந்தோஷ்: சுப்ரமணியுபரம் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானதால் ஸ்வாதி ரெட்டியை சுப்ரிமணியபுரம் ஸ்வாதி என்று தான் தமிழ் சினிமா ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கு சினிமா இயக்குநர் சந்தோஷ் நகோத்திக்கும், ஸ்வாதிக்கும் ஜூலை 8ம் தேதி திருமணம் நடந்திருக்கிறது.

முகத்தை காட்டாமல் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை மட்டும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, 08-07-2026 அன்று திருமணமாகிவிட்டது என தெரிவித்துள்ளனர். அதை பார்த்துவிட்டு முதல் ஆளாக சந்தோஷை வாழ்த்தியிருக்கிறார் நடிகர் நவீன் சந்திரா. விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா கட்டா, நடிகர் தேஜ், நடிகை லட்சுமி மஞ்சு என பல பிரபலங்கள் ஸ்வாதியின் இந்த புது வாழ்க்கை சிறக்க வாழ்த்தியிருக்கிறார்கள். ரசிகர்களோ சந்தோஷத்தில் வாழ்த்துக்களுடன் ஹார்டின்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

விகாஸுடன் விவாகரத்து: இது ஸ்வாதியின் இரண்டாவது திருமணமாகும். முன்னதாக விமானி விகாஸ் வாசுவை காதலித்து 2018ம் ஆண்டு மணந்தார். 2023ம் ஆண்டு விகாஸுக்கும், ஸ்வாதிக்கும் விவாகரத்தோ என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். தன் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய ஸ்வாதி, விவாகரத்து குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் தன்னை வைத்து மன்த் ஆஃப் மது படத்தை இயக்கிய சந்தோஷை திருமணம் செய்திருக்கிறார்.

நாய் பேச்சு: திருமணம் குறித்து ஸ்வாதி ரெட்டி தெரிவித்த கருத்து அண்மையில் வைரலாகி அவரை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். விகாஸ் வாசுவை மணப்பதற்கு முன்பு ஸ்வாதி தெரிவித்த கருத்து தற்போது மீண்டும் விவாதப் பொருளானது. திருமணம் குறித்து ஸ்வாதி அப்பொழுது தெரிவித்தாவது, இந்த காலத்தில் ஒருத்தரை நம்பி திருமணம் செய்து கொண்டு வாழ்வது ரொம்ப கஷ்டம். ஒருவருக்கும் பொறுமை கிடையாது. அதனால் தான் திருமணம் செய்து நிம்மதி இழந்து வாழ்வதற்கு பதிலாக எப்பொழுதும் உண்மையாக இருக்கும் நாயை வளர்க்கலாம் என்றார்.

பணம் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் பேசுகிறார். இந்த ஸ்வாதி விரைவில் மறுமணம் செய்வார் என்றார்கள் சமூக வலைதளவாசிகள். இந்நிலையில் ஸ்வாதி, சந்தோஷின் திருமண புகைப்படங்களை பார்த்தவர்களோ, ஒரு முறை திருமணம் செய்து கொண்டாலே நிம்மதி போய்விடும் என்றவர் இரண்டாவது திருமணம் செய்திருகிறார். இனியாவது யோசித்து பேசுங்கள் ஸ்வாதி. திருமணம் ஒன்றும் மோசம் இல்லை. அதனால் தானே மீண்டும் திருமண பந்தத்தில் சேர்ந்திருக்கிறீர்கள் என்றார்கள்.

சந்தோஷ் யார்?: 2020ம் ஆண்டு வெளியான பானுமதி அன்ட் ராமகிருஷ்ணா படம் மூலம் இயக்குநர் ஆனவர் சந்தோஷ் நகோத்தி. இதையடுத்து ஸ்வாதியை வைத்து மன்த் ஆஃப் மது படத்தை இயக்கி, தயாரித்து 2023ம் ஆண்டு ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இயக்குநர் தன் பட நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் திரையுலகம் பார்த்திராத விஷயம் இல்லை. அதனால் இந்த ஜோடி கடைசி வரை ஒற்றுமையாக வாழட்டும் என வாழ்த்துகிறார்கள் டோலிவுட் ரசிகர்கள்.

ஸ்வாதியின் திருமண செய்தி அறிந்த கோலிவுட் ரசிகர்களோ, யார் அந்த சந்தோஷ் என்று அவரை பற்றி கூகுளில் தேடிக் கண்டுபிடித்து படித்து வருகிறார்கள். கடவுள் இரண்டாம் சான்ஸ் கொடுத்திருக்கிறார். இதுவாவது உங்களுக்கு நல்ல வாழ்க்கையாக அமைந்து கடைசி வரை சந்தோஷமாக சந்தோஷுடன் இருக்க வாழ்த்துக்கள் என்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil