Dailyhunt
திமுக ஆட்சியில் 3வது முறையாக தமிழக சட்டப்பேரவை கலைப்பு..

திமுக ஆட்சியில் 3வது முறையாக தமிழக சட்டப்பேரவை கலைப்பு..

Samayam Tamil 1 week ago

டந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையடுத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவை பதவியை நேற்று (மே 08 ஆம் தேதி) ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கலைப்பு என்றால் என்ன?

சட்டப்பேரவை கலைப்பு என்பது ஜனநாயக ஆட்சியில் உள்ள மிக முக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை (Legislative Assembly) அதன் கால அவகாசத்தை முடிக்கும் முன்பே கலைக்கப்படுவதை தான் சட்டப்பேரவை கலைப்பு என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, ஒரு சட்டப்பேரவையின் காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் சில அரசியல் சூழ்நிலைகள், நிர்வாக சிக்கல்கள் அல்லது பெரும்பான்மை இழப்பு போன்ற காரணங்களால் அந்த காலம் முடிவதற்கு முன்பாகவே அது கலைக்கப்படலாம்.

சட்டப்பேரவை கலைப்புக்கான முக்கிய காரணம்

இருப்பினும், ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது கூட்டணி தனது பெரும்பான்மையை இழப்பது தான் சட்டப்பேரவை கலைப்பதற்கான முக்கிய காரணங்களில் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி தொடர முடியாது என்பதால், முதலமைச்சர் ஆளுநரிடம் சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைக்கலாம். அதேபோல், அரசியல் நிலைமை சீர்குலைந்தால் அல்லது அரசு சரியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால், ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையுடன் சட்டப்பேரவையை கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தலாம்.

4 முறை கலைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை

தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, சட்டப்பேரவை கலைப்பு சில நான்கு முறை நடந்துள்ளது.

  • 1976 - மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது
  • 1980 - எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது
  • 1988 - ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது
  • 1991 - மீண்டும் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை பதவி காலம்

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை பதவி காலம் மே 10, 2026 அன்று முடியவுள்ளதையடுத்து, 17வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மே 04, 2026 அன்று வெளியிடப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாகவே பெற்று அபார வெற்றி பெற்றது. ஆனால், ஆளும் கட்சியான திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.

5வது முறையாக கலைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை

இதையடுத்து, மே 05, 2026 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில், 16வது சட்டப்பேரவையின் காலம் மே 10 ஆம் தேதி முடிவடைவதற்கு முன்பாகவே, நேற்றே (மே 05, 2026) கலைக்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக, தமிழகத்தில் ஐந்தாவது முறையாக சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil