Dailyhunt
திமுக எவ்வளவு டேஞ்சர்னு இனிமே தான் தெரிய வரும்.. தவெகவை குறிவைத்து பேசிய ஜூலி - வீடியோ!

திமுக எவ்வளவு டேஞ்சர்னு இனிமே தான் தெரிய வரும்.. தவெகவை குறிவைத்து பேசிய ஜூலி - வீடியோ!

Samayam Tamil 1 week ago

மிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

இந்த தேர்தலில் தவெக சுமார் 35% வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை தவெக ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.முன்னாள் எம்ஜிஆரின் சாதனையை தவெக தலைவர் விஜய் சமன் செய்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த தேர்தலில் தவெகக்கு அதிக ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியிலிருந்தும் தவெக சில வாக்குகளை பெற்றதாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சுமார் 45.38% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 39.71% வாக்குகளையும் பெற்றிருந்தது.


அதேபோல் தனித்துப் போட்டியிட்ட நிலையில் திமுக 37.7% வாக்குகளும், அதிமுக 33.29% வாக்குகளும் பெற்றிருந்தன. ஆனால் இந்த தேர்தலில் திமுக தனியாக 24.21% வாக்குகளும், அதிமுக 21.36% வாக்குகளும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது திமுக சுமார் 13% வாக்குகளையும், அதிமுக சுமார் 12% வாக்குகளையும் இழந்ததாக கணிக்கப்படுகிறது.

107 இடங்களில் தவெக முன்னிலை

இந்த நிலையில் அந்த வாக்குகளில் ஒரு பகுதியை தவெக பெற்றிருக்கலாம் எனவும், மேலும் நாதகவின் 4% வாக்குகள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவும் தவெகக்கு சாதகமாக இருந்திருக்கலாம் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.



இதற்கிடையே தவெக கட்சியையும் அக்கட்சித் தலைவரை பிக்பாஸ் ஜூலி கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். இந்த நிலையில்,திமுக எதிர்பாராத விதமாக 73 இடங்களை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜூலியை காணவில்லை என காணவில்லை போஸ்டர் எல்லாம் சமூக வலைதளங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்...

பிக்பாஸ் ஜூலி வீடியோ சர்ச்சை

இங்க பாருங்க நான் இங்கதான் இருக்கேன் உங்களுடைய வெற்றியை பார்த்து இருக்கிறேன்.. இதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்கள்.. ஒரு விஷயம் எனக்கு புரியல அரசியலில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் கிடையாது. இது ரொம்பவும் நல்லா தெரிந்தவர்கள்தான் திமுகவினர். ஒரு விஷயத்திற்காக துவண்டு ஆஃப் ஆகி போய் எல்லாம் நாங்கள் உட்கார மாட்டோம்.

நாங்கள் ஜெயித்து உட்கார்ந்ததை விட எதிர்க்கட்சியில் உட்காருந்தது தான் அதிகம். இப்போ தானே நீங்கள் முதன் முறையாக வந்திருக்கிறீர்கள் எதிர்க்கட்சியாக திமுக உட்காரும் போது எவ்வளவு டேஞ்சர் என்று உங்களுக்கு இனிமேதான் புரியப்போகுது. நாங்க சண்டை செஞ்சே பழகினவங்க.. எந்த சண்டையானாலும் நாங்க ரெடி.. வாங்க களத்துல சந்திப்போம். தமிழக அரசியல் களம் இதுக்கு மேல தான் சூடு பிடிக்க போகுது என்று கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil