Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தி.மு.க. முப்பெரும் விழா: 2026-ஆம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியல் அறிவிப்பு -முழுவிவரம் இதோ

தி.மு.க. முப்பெரும் விழா: 2026-ஆம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியல் அறிவிப்பு -முழுவிவரம் இதோ

Samayam Tamil 3 days ago

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா நடத்தப்படுகிறது.

தி.மு.க. முப்பெரும் விழா

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள "கலைஞர் அரங்கில்" கோலாகலமாக நடைபெறவுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறுபவர்கள் விவரம்:

பெரியார் விருது: விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா

அண்ணா விருது: சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு. சேலம் ஜி.கே. சுபாஷ்

கலைஞர் விருது: கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவருமான திரு. திருச்சி சிவா, எம்.பி.

பாவேந்தர் விருது: கழக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி என்.வி.என். சோமு

பேராசிரியர் விருது: தலைமைக் செயற்குழு உறுப்பினர் திரு. மிசா எஸ். அகமது தம்பி

மு.க.ஸ்டாலின் விருது: இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. நா. இளையராஜா

இத்தகவலை தி.மு.க. தலைமைக் கழகம் 01-09-2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுகவில் நடந்த மாற்றங்கள்

  • சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. மறுபுறம் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் இருப்பதுடன், ஜென்ஸீ தலைமுறை வாக்காளர்களின் ஆதரவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
  • இதனால் இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் திமுகவிலும் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • சமீபத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்றிய அளவில் கட்சி பதவிகள் வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயதுக்குட்பட்டவர்களையே நியமிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பல ஆண்டுகளாக ஒரே நபர்கள் மாவட்ட செயலாளர் பதவியில் நீடித்து வருவதால், இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாவட்ட செயலாளராக பதவி வகிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
  • தவெகவில் விஜய் தலைமையில் இளம் நிர்வாகிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திமுகவும் உதயநிதி தலைமையில் இளைஞர்களை கட்சியில் அதிகளவில் முன்னிலைப்படுத்த முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
  • மேலும், சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் புதிய தலைமுறை நிர்வாகிகளை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
  • தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கையிலும், கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்க வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திமுகவில் இந்த புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil