வேத ஜோதிடர்களின் கூற்றுப்படி, திருமண தடை உண்டாவதன் மிக முக்கிய காரணமாக, ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் காணப்படும் கிரக நிலைகள் என நம்பப்படுகிறது.
குறிப்பாக சுக்கிரன் மற்றும் குருவின் நிலைபாடு, ஜாதகத்திற்கு உரியவரின் திருமண தடைக்கு முக்கிய காரணமாக அமையலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க (திருமண தடையை நீக்க) கிரகங்களின் ஆற்றல் சமநிலையை உறுதி செய்வது அவசியம். மேலும், நிபுணர்கள் பரிந்துரைக்கும் சரியான பரிகாரங்களை முறையாக செய்வதும் அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
நிபுணர்கள் பார்வையில், திருமணம் தள்ளிப்போவதன் பொதுவான காரணங்கள்!
- நிபுணர்கள் கூற்றுப்படி, தனி ஒரு நபரின் ஜாதகத்தில் 7-வது வீட்டில் கிரகங்களின் ஆற்றல் சமநிலை பாதிப்பது, எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குவது திருமண தடைக்கு முக்கிய காரணமாக அமையும். குறிப்பாக, திருமணத்தை தள்ளிப்போடும், நல்ல வரன் கிடைத்து விரைவில் நடக்க இருந்த திருமணம் இறுதி நொடியில் தடைபடும்.
- தனி ஒரு நபரின் ஜாதகத்தில் ஏழாம், எட்டாம் அல்லது பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பது, மாங்கல்ய தோஷத்தை உண்டாக்கும். இதன் தாக்கம் திருமணத்தை தள்ளிப்போடுவதோடு, திருமணம் முடித்த தம்பதியரின் வாழ்க்கையில் மனஸ்தாபங்களை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும், மன அமைதியையும் பாதிக்கும்.
- ஜோதிட கணிப்புகள் படி தனி ஒரு நபரின் ஜாதகத்தில் 7-வது வீட்டையோ அல்லது 7-ஆம் வீட்டின் அதிபதியையோ சனி பாதித்தால், ஜாதகத்திற்கு உரியவரின் திருமணம் தள்ளிப்போகும் அபாயம் உள்ளது.
- திருமணம் முடிக்காத ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது குருவின் நிலை பலவீனமாக இருப்பின், அவரது திருமணத்தில் தாமதம் நீடிக்கலாம். மேலும், அவருக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதிலும் தாமதம் நீடிக்கலாம்.
- ஏழாம் வீட்டின் அதிபதி வக்ர நிலையில் இருப்பதும், ஜாதகத்திற்கு உரியவரின் திருமண காரியங்களை தள்ளிப்போடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் தாக்கம் அவர்களின் திருமண வாழ்க்கையை மட்டும் அல்ல, தனிப்பட்ட வளர்ச்சியையும் பாதிக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
- திருமணம் முடிக்காத பெண்களின் ஜாதகத்தில் குரு கிரகம் பலவீனமான நிலையில் இருக்கும் பட்சத்தில், அவரது திருமணம் தள்ளிப்போகலாம், திருமண காரியங்களில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகலாம் என கூறப்படுகிறது.
பரிகாரம் எதும் உண்டா?
- திருமணம் முடிக்காத பெண்கள் தங்கள் திருமண தடையை போக்க, தங்கள் ஜோதிடரின் வழிகாட்டுதல் படி மஞ்சள் புஷ்பராகத்தை அணியலாம். இவ்வாறு செய்வது, குருவின் ஆற்றல் சமநிலையை மேம்படுத்தும், அவர்களின் வாழ்க்கையில் மங்களகரமான மாற்றங்களை கொண்டு வரும்.
- சனியின் தாக்கத்தால் திருமண தடை சந்திக்கும் நபர்கள், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அரச மரத்தின் கீழ், எண்ணெய் தீபம் ஏற்றி - சனி தேவனை முறையாக வழிபட்டு வர நேர்மறை பலன்களை காணலாம்.
- பொதுவான திருமண தடை பிரச்சனைகளுக்கு, மஞ்சள் நிற பொருட்களை தானமாக வழங்கலாம். குறிப்பாக பருப்பு, மஞ்சள் நிற ஆடைகள் போன்றவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக அளிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பரிகாரங்கள், பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் மரபு வழி நம்பிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. தனி நபரின் ஜாதக அமைப்பு, கிரக நிலை பொறுத்து பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். எனவே, உங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனை செய்து, பரிகாரங்களை முயற்சிப்பது நல்லது!

