Dailyhunt
திருமணத்திற்குப் பின் சாதகமான மாற்றங்கள் காணும் ராசிகள்!

திருமணத்திற்குப் பின் சாதகமான மாற்றங்கள் காணும் ராசிகள்!

Samayam Tamil 3 weeks ago

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் ஒரு சில ராசியினர், தங்களின் திருமணத்திற்கு பின்னர் சுபிக்ஷமான மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் காண்பதாகவும், குறிப்பாக தொழில் வாழ்க்கையில் உச்சம் பெறுவதாகவும் நம்பப்படுகிறது.

நிபுணர்கள் கணிக்கும் அந்த சில ராசிகளின் பட்டியல் மற்றும் இந்த ராசியினர் சந்திக்கும் மாற்றங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் சற்று விரிவாக நாம் காணலாம்!


வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், அனைத்து ராசியினரும் தங்கள் பண்புகளுக்கு ஏற்ப, வாழ்க்கை பயணத்தை அணுகி, தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கின்றனர். அந்த வரிசையில், திருமணத்திற்கு பின் தங்கள் எதிர்காலத்தை சுபிக்ஷமாக மாற்றும் திறன் படைத்த ராசிகள் எது? திருமணத்திற்கு பின் இவர்களின் வாழ்க்கை எப்படி சிறப்பாக மாறும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்!சிம்மம்!

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் - குறிப்பாக, சிம்ம லக்னத்தில் பிறந்த பெண்கள் - அடிப்படையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றனர். கணிப்புகள் படி, திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை துணையின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் ஒரு நபராக இவர்கள் பார்க்கப்படுகின்றனர். அதேநேரம், தனது வாழ்க்கை துணையின் வெற்றிக்கு படியாய் நின்று, அவருடன் இணைந்து தனது வெற்றியையும் இவர்கள் உறுதி செய்கின்றனர். அந்த வகையில் திருமணத்திற்கு பின் இவர்களது வாழ்க்கையும் பிரகாசமாக மாறுகிறது!


துலாம்!

சுக்கிரனை ஆளும் அதிபதியாக கொண்ட துலாம் ராசியினர், அடிப்படையில் படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள். தங்கள் தனித்துவமான திறமைகள் மூலம், எதிர்பார்ப்புக்கும் அதிகமான வெற்றிகளை தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் நபர்கள்.

கிரக நிலை கணிப்பாளர்கள் கூற்றுப்படி, திருமணத்திற்கு பின்னர் இவர்களின் வாழ்கை பிரகாசமாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். தனது வாழ்க்கை துணையின் உதவியுடன் புதிய தொழில் தொடங்குவார்கள், தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிற்கும் இடையே சமநிலையை உண்டாக்கி, ஆரோக்கியமான வெற்றியை உறுதி செய்வார்கள்.


ரிஷபம்!

ரிஷப ராசியினர் தங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு அளித்து செயல்படுபவர்கள். ஆழ்ந்த சிந்தனையாளர்கள், நிலையான வெற்றியை தேடிச் செல்பவர்கள். ரிஷப ராசி கொண்டவர்களின் லட்சியங்கள் பெரும்பாலும் அவர்களின் திருமணத்திற்கு பின்னரே நிறைவேறுகிறது. அதற்கு காரணம், வாழ்க்கை துணையின் ஆதரவு மற்றும் ஊக்கம் என நம்பப்படுகிறது. கடின உழைப்புக்கு பெயர் பெற்ற இவர்களின், முயற்சிகள் பெரும்பாலும் அவர்களின் திருமணத்திற்கு பின் வெற்றி காண்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


மகரம்!

மாற்றத்தை விரும்பும் மகர ராசியினர், உண்மையில் உணர்வுகளுக்கும் - உறவுகளுக்கு மதிப்பு அளிப்பவர்கள். தனது வாழ்க்கை துணைக்கு உற்ற பாதுகாவலராக இருக்கும் இவர்கள், திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை துணையின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை செய்கின்றனர். ஊர் மெச்சும் தம்பதியர் எனும் பெயர் எடுக்கின்றனர். உண்மை, நேர்மை, தன்மை போன்றவை இவர்களிடம் காணப்படும் தனித்துவமான பண்புகள் ஆகும்.


கடகம்!

கடக ராசியினர் அடிப்படையில் கருணை உள்ளம் கொண்டவர்கள். தங்கள் செயல்பாடுகள் ஒருபோதும் மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் அமைவது கூடாது எனும் கருத்தில் உறுதியாக இருப்பவர்கள். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் உறவுகளுக்கு இடையே வலுவான பிணைப்பை உண்டாக்க வேண்டும் என்பது கடக ராசியினரின் விருப்பம் ஆகும்.

அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாகவே, சூழ்நிலைகள் அவர்களுக்கு அமையும். திருமணத்திற்கு பின்னர், சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக மாறும், எதிர்பார்த்த வெற்றிகளையும் அவர்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்!


மீனம்!

ஆழ்ந்த சிந்தனையாளர்கள், கடுமையாக உழைப்பவர்கள். எதிர்காலம் தொடர்பான தெளிவான சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை கொண்டிருக்கும் நபர்கள். நிலையான வெற்றியை நோக்கி பயணிக்கும் இவர்கள், திருமணத்திற்கு பின்னர் தனது வெற்றியுடன் தன்னை சார்ந்து இருப்பவர்களின் வெற்றியையும் உறுதி செய்கின்றனர். கணவன் - மனைவி என இருவரும் ஒன்றாக இணைந்து, சாதனைகள் பல செய்து ஊர் போற்றும் தம்பதியராய் பெயர் எடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட நம்பிக்கை மற்றும் மரபு வழி நம்பிக்கைகளின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டவை. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கொண்டிருக்கவில்லை!


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil