Dailyhunt
Tiruvannamalai girivalam caves திருவண்ணாமலையில் இருக்கும் இந்த ரகசிய குகைகள் பற்றி தெரியுமா?

Tiruvannamalai girivalam caves திருவண்ணாமலையில் இருக்கும் இந்த ரகசிய குகைகள் பற்றி தெரியுமா?

Samayam Tamil 2 weeks ago

நினைத்தாலே முக்தியை தரும் திருவண்ணாமலை திருத்தலம் பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பல ஆன்மீக ஆச்சரியங்களையும், தெய்வீக ஆற்றல்களையும் கொண்ட திருத்தலம்.

திருவண்ணாமலைக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு, கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களையும், ஜீவ சமாதிகளையும், குளங்களையும் தரிசித்து விட்டு வந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் கிரிவலம் மட்டும் சென்று விட்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அண்ணாமலையார் கிரிவலப் பதையில் பலருக்கும் தெரியாத ரகசிய குகைகளும், அங்கு பல அதிசயங்களையும் மறந்திருக்கின்றன.

திருவண்ணாமலை அதிசய குகைகள் :

1. விருபாக்ஷி குகை :

கிரிவலப் பாதையில் உள்ள குகைகளில் 500 ஆண்டு கால பழமையான அதிசய குகை தான் இந்த விருபாக்ஷி குகை. இதை ஓம் வடிவ குகை என்று சொல்லுவார்கள். இந்த குகை, "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தில் வடிவத்தில் அமைந்துள்ளது. இங்கு தான் பகவான் ரமணர் 17 ஆண்டுகள் தவம் புரிந்தார் என சொல்லப்படுகிறது.

2. ஸ்கந்தாஸ்ரமம் :

மலையின் உச்சிக்கு அருகில் உள்ளது தான் ஸ்கந்தாஸ்ரமம். இங்கு மலையில் இருந்து ஊறும் அதிசய தீர்த்தம் உள்ளது. இது எந்த காலத்திலும் வற்றாத அதிசயமான, இயற்கை அற்புதம் நிறைந்த தீர்த்தம். மலையின் உச்சிக்கு அருகில் இருந்தால் இங்குள்ள ஒரு சிறிய சுனையில் வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.

3. சித்தர்கள் வாழும் குகை :

கிரிவலப் பாதையில் உள்ள சில குகைகளில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் தவம் செய்வதாக பல பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்கு அருபமாய் வாழும் சித்தர்கள் அவ்வப் போது கிரிவலம் செல்வதும், அண்ணாமலையாரை சென்று தரிசிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

4. மாமரக் குகை :

ஒரு காலத்தில் இங்கு அடர்ந்த மாமரங்கள் இருந்ததால் இப்பெயர் பெற்றது. பகவான் ரமணர் இங்கு தவம் செய்த போது, இங்கிருந்த சிறிய நீர்ச்சுனை இன்றும் வற்றாமல் ஒரு இயற்கை அதிசயமாய் உள்ளது. இதனால் இதை தாகம் தீர்க்கும் தவம் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள்.

5. நமசிவாயர் குகை :

பல நூற்றாண்டகளுக்கு முன்பு வாழ்ந்த "குகை நமசிவாயர்" என்ற சித்தர் இங்கு தான் தவம் செய்தார். இந்த குகையில் அமர்ந்து, தியானம் செய்தால், இன்றும் ஒரு விதமான தெய்வீக உஷ்ணத்தை நம்மால் உணர முடியும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு தவம் செய்த குகை நமசிவாய சித்தர், நெருப்பாய் மாறியதாகவும், இவரின் இருப்பையே அந்த தெய்வீக உஷ்ணர் உணர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஐந்து குகைகள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமான குகைகள் திருவண்ணாமலையில் இருப்பதாகவும், இவைகள் மறைந்திருக்கும் தெய்வீக அதிசயங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. நீங்கள் கிரிவலம் செல்லும் போது இந்த குகைகளை நேரில் இதுவரை தரிசித்தது கிடையாது என்றால், அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும் போது அவசியம் தரிசித்து விட்டு வாருங்கள். இதனால் அண்ணாமலையாரின் அருளும், சித்தர்களின் ஆசிகளும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil