தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது today chanakya வின் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் தவெகவும் மூன்றாம் இடத்தில் அதிமுகவும் இடம்பெறும் என Today 's chanakya கருத்து கணிப்பு சொல்கின்றது
நேற்று மாலையில் இருந்து கருத்து கணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தான் போய்க்கொண்டு இருக்கின்றது. கருத்து கணிப்புகளில் கலவையான முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு சில கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது. சில கணிப்புகள் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கின்றது. அதைப்போல தவெகவிற்கு சாதகமாகவும் சில கணிப்புகளை பார்க்க முடிகின்றது. இப்படி கருத்து கணிப்புகளின் மூலம் நாம் ஒரு முடிவிற்கு வர முடியாத நிலை தான் இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக கருத்து கணிப்புகளை வைத்து பார்க்கையில் இம்முறை மும்முனை போட்டி இருப்பது உறுதியாக தெரிகின்றது. இந்த நிலையில் தான் தற்போது Today 's chanakya கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் படி பார்க்கையில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என சொல்லப்படுகின்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி114 -136 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என Today 's chanakya கருத்து கணிப்பில் சொல்லப்படுகின்றது.
ஆனால் இரண்டாம் இடத்தில் தவெக தான் இருக்கும் என Today 's chanakya கணித்துள்ளது. தவெக 52 -74 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக34 -56 இடங்களில் வெற்றிபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு அதிமுகவிற்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகவே தெரிகின்றது.
ஏனென்றால் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இம்முறை மூன்றாம் நிலைக்கு செல்லும் என இந்த கணிப்பு சொல்லியிருக்கிறது. மேலும் இந்த கணிப்பின் படி பார்க்கையில் விஜய் தான் எதிர்க்கட்சியாக வருவார் என தெரிகின்றது. ஆனால் இதெல்லாம் வெறும் கணிப்புகள் தானே தவிர மக்களின் தீர்ப்பு என்ன என்பது மே நான்காம் தேதி தான் தெரிய வரும். எனவே இந்த கருத்து கணிப்புகள் பேசும்பொருளாக ஆனாலும் இறுதியான முடிவு மக்களின் கையில் தான் உள்ளது.
ஏற்கனவே மக்கள் யார் நம்மை ஆளவேண்டும் என முடிவு செய்திருக்கும் நிலையில் அந்த முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வரும். இந்நிலையில் நேற்றைய தினம் கருத்து கணிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருக்கும் நிலையில் இன்று திமுக மற்றும் தவெக கட்சியினர் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து மாலை தவெக தலைவர் விஜய் தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். இதன் மூலம் தேர்தல் பிந்தைய கணிப்புகள் சற்று தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகின்றது.
இந்நிலையில் Today 's chanakya கருத்து கணிப்பின் படி ,திமுக 39 % வாக்குகளையும், தவெக 30 % வாக்குகளையும், அதிமுக 27 % பெரும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த முறையை ஒப்பிடும்போது இம்முறை வாக்கு சதவீதம் சற்று குறைந்திருப்பதை காண முடிகின்றது. அதற்கு தவெக வருகை மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகின்றது. திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியின் வாக்குகளையும் தவெக பிரிந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.
| திமுக | 114-136 |
| தவெக | 52-74 |
| அதிமுக | 34 -56 |
| மற்றவை | 0-2 |

