த்ரிஷா கெரியர்: பிரசாந்தின் ஜோடி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்த பெண்ணான த்ரிஷா கிருஷ்ணன் சுமார் 24 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா என் உயிர் மூச்சு என்று கூறி வரும் அவர் தன் முதுகு பகுதியில் கேமராவை டாட்டூ போட்டிருக்கிறார்.
என் உடம்பில் உயிர் இருக்கும் வரை நான் படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் என் விருப்பம் என்கிறார் த்ரிஷா கிருஷ்ணன். இந்நிலையில் சினிமாவுக்கு முழுக்குப் போடப் போகிறாராம் த்ரிஷா. அவருக்கு அரசியல் மீது ஆர்வம் வந்துவிட்டதாம் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
த்ரிஷாவாவது சினிமாவை விட்டு விலகுவதாவது, வாய்ப்பே இல்லை என்று நினைத்தால் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.
த்ரிஷா செய்தி: த்ரிஷா இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று ஆன்லைனில் பேசப்படுவது உண்மையா என்று சித்ரா லட்சுமணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, அது உண்மையான செய்தி தான் என்றார். மேலும் அதை சில தயாரிப்பாளர்கள் கூட தன்னிடம் உறுதி செய்ததாக கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக திரையுலகில் இருப்பவர் சித்ரா லட்சுமணன். அவரே கூறியிருப்பதால் த்ரிஷா கிருஷ்ணன் பற்றிய தகவல் உண்மையாக தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் இனி நான் படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று த்ரிஷாவே அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப மாட்டோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா கண்ணில் இந்த செய்த கண்டிப்பாக பட்டிருக்கும் இல்லை என்றால் இனியாவது படும். அப்படி அவர் தன் கெரியர் குறித்த தகவலை இன்டர்நெட்டில் பார்த்தால் நிச்சயம் விளக்கம் கொடுத்து ரசிகர்களை தெளிவு பெறச் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் சேர்ந்து த்ரிஷா நடித்திருக்கும் கருப்பு படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அப்படி என்றால் கருப்புக்கு பிறகு த்ரிஷாவை படங்களில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
த்ரிஷா கல்யாணம்: சினிமா வேண்டாம் என்று சொல்லும் ஆள் இல்லை த்ரிஷா. முன்னதாக தயாரிப்பாளர் வருண் மணியனோ கழுத்தில் தாலி ஏறிய பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்று கன்டிஷன் போட்டாராம். தாலி ஏறினால் தானே நடிக்கக் கூடாது என்று நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்தை நிறுத்தியவர் த்ரிஷா கிருஷ்ணன். அவர் போய் தற்போது சினிமாவுக்கு டாட்டா காட்டுவார் என்றால் நம்ப கடினமாக உள்ளது.
அதே சமயம் தனக்கு தமிழக முதல்வராகும் ஆசை இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் த்ரிஷா தெரிவித்தது குறித்தும் தற்போது பேசப்படுகிறது. அரசியலுக்கு போவது சரி, ஆனால் அவரோ எந்த கட்சியிலும் இல்லையே. அப்புறம் எப்படி முதல்வராவது என்று கேட்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றால் த்ரிஷாவுக்கு உயிர். அதனால் அவர் மீது இருக்கும் மதிப்பும், மரியாதையால் அதிமுகவில் சேர்வாரா இல்லை நண்பர் விஜய்யின் கட்சியான தவெகவில் சேர்வாரா என்றும் பேசப்படுகிறது.

