Dailyhunt
த்ரிஷானா சும்மாவா!: தேர்தல் முடிவு நாளில் X தளத்தில் விஜய்யை முந்திய சவுத் குயின்

த்ரிஷானா சும்மாவா!: தேர்தல் முடிவு நாளில் X தளத்தில் விஜய்யை முந்திய சவுத் குயின்

Samayam Tamil 1 week ago

த்ரிஷா டிரெண்ட்: நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதால் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வரும் நாள் என்பதால் முதலிடத்தில் டிரெண்டாகியிருக்கிறது #electionresult2026.

இரண்டாவது இடத்தில் த்ரிஷாவும், மூன்றாவது இடத்தில் தவெக தலைவர் விஜய்யும் டிரெண்டாகியுள்ளனர். ஆனால் மூன்றாவது இடம் நிலையாக இல்லை. அவ்வப்போது பாஜக நிர்வாகி அண்ணாமலை அந்த இடத்தை பிடித்து வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டிருக்கும் விஜய் கட்சி முன்னிலை வகித்து வரும் நேரத்திலும் டிரெண்டிங்கில் அவரை த்ரிஷா கிருஷ்ணன் முந்திவிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, சவுத் குயின் என்றால் சும்மாவா என பெருமையாக பேசி வருகிறார்கள்.

திருப்பதி விசிட்: தன் பிறந்தநாளில் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார் அவர். பிறந்தநாளும் அதுவுமாக சாமி தரிசனம் செய்யச் சென்றார் த்ரிஷா. ஆனால் தேர்தல் முடிவுகள் வரும் நாள் என்பதால் நண்பர் விஜய்யின் வெற்றிக்காக சென்றிருக்கிறார் என்று பேசப்படுகிறது. மேலும் த்ரிஷாவின் பிரார்த்தனை வீண் போகவில்லை. விஜய்ணாவின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்யா போட்ட ட்வீட் இன்று அதிக அளவில் ஷேர் செய்யப்படுவதுடன், அது பற்றி கமெண்ட் செய்யப்படுகிறது. சர்வம் படத்தில் நடித்ததில் இருந்து ஆர்யாவை த்ரிஷாவும், த்ரிஷாவை ஆர்யாவும் குஞ்சுமணி என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

சர்வம் படத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்திய நிலையில் நிஜத்திலும் பயன்படுத்துகிறார்கள். அப்படி ஹேப்பி பர்த்டே மை டியர் குஞ்சுமணி ஸ்வீட்ஹார்ட் என்று த்ரிஷாவை ஆர்யா வாழ்த்திய ட்வீட் தான் தற்போது கவனம் ஈர்த்திருக்கிறது.

மேலும் 2017ம் ஆண்டு தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த த்ரிஷாவுக்கு நன்றி குஞ்சுமணி என அவர் பதில் அளித்ததும் இன்று ஷேர் செய்யப்படுகிறது.
30 வயதை தாண்டினால் நடிகையின் மார்க்கெட் அடிவாங்கும் என்பதெல்லாம் அந்த காலம். 43 வயதிலும் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் த்ரிஷா கிருஷ்ணன் இளசுகளுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கருப்பு த்ரிஷா: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா கிருஷ்ணன் முதல் முறையாக நடித்திருக்கும் கருப்பு படம் மே 14ம் அதாவது 10 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. நடிப்பின் நாயகன் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் த்ரிஷா கிருஷ்ணன் இல்லாததை பார்த்த ரசிகர்களோ, எங்க தலைவிய எங்கய்யா காணோம் பாலாஜி என்று கேட்டார்கள்.

இந்நிலையில் கருப்பு படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அவர் அந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார். கருப்பு ரிலீஸுக்கு பிறகு த்ரிஷாவின் நடிப்பு கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்திற்கு தான் வாக்களித்திருக்கிறார் த்ரிஷா என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்கு காரணம் கில்லி பிஜிஎம் உடன் த்ரிஷா போட்ட இன்ஸ்டா ஸ்டோரி தான்.

மேலும் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனோ வாக்குப்பதிவு நாளில் விஜய் ரசிகர்களை போன்றே காக்கி, வெள்ளை உடையில் வந்தார். அதுவும் விஜய்ணா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil