அந்தாஸ் படப்பிடிப்பு: 2000ம் ஆண்டு தனது 18வது வயதில் உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா, தமிழன் படம் மூலம் நடிகையானது அனைவருக்கும் தெரியும்.
கோலிவுட்டுக்கு வந்த மறு ஆண்டே பாலிவுட்டுக்கு சென்றார். அவரின் இரண்டாவது பாலிவுட் படமான அந்தாஸ் மூலம் தான் பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற லாரா தத்தா நடிகையானார்.
அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்த அந்தாஸ் படத்தின் பாடல் காட்சியை தென்னாப்பிரிக்காவில் ஷூட் செய்தபோது நடந்ததை ப்ரியங்கா சோப்ரா இன்னும் மறக்கவில்லை. பாலிவுட்டின் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான சரோஜ் கானின் மகன் ராஜ் கான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்க ப்ரியங்கா சோப்ராவுக்கு சரியாக ஆட வரவில்லை. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் ராஜ் கான் கோபப்பட்டு திட்டிவிட்டார்.
அது குறித்து ப்ரியங்கா சோப்ரா தற்போது கூறியிருப்பதாவது, அந்தாஸ் படத்தில் நடித்தபோது எனக்கு 19, 20 வயது இருக்கும். நான் நடிக்கத் துவங்கியபோது டான்ஸ் வராது. நடிக்க வேண்டும், அதே சமயத்தில் டான்ஸும் ஆட வேண்டும் என்பதை சமாளிக்க கடினமாக இருந்தது. நான் டான்ஸ் ஆடியதை பார்த்து அப்செட்டாகி மைக்கை தூக்கி வீசிவிட்டார் டான்ஸ் மாஸ்டர். நீங்க அழகிப் பட்டம் வென்றிருக்கலாம். ஆனால் நடிகையாகும் முன்பு டான்ஸ் ஆட கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார். எனக்கு ஒரே அசிங்கமாகப் போச்சு என்றார்.
ராஜ் கான் திட்டியதால் கவலைப்பட்டாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நாடு திரும்பியதும் டான்ஸ் கிளாஸில் சேர்ந்து சின்சியராக டான்ஸ் கற்றார். ப்ரியங்காவுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது என்று சொன்னவர்களே அவரின் ஆட்டத்தை பார்த்து அசந்து போகும் அளவுக்கு சூப்பர் டான்ஸராகிவிட்டார். ப்ரியங்கா சோப்ரா வேற லெவலில் நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே மாதிரி அவர் அற்புதமாக நடனமும் ஆடுவார். ப்ரியங்கா சோப்ரா டான்ஸ் ஆடினால் மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு நடனத்தில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார்.
மகள், கணவர், கெரியர்: ப்ரியங்கா சோப்ரா தன் மகள் மால்தி மேரி பற்றி பேசியிருக்கிறார். மகள் வேகமாக வளர்ந்துவிட்டதாகவும், ஸ்கூலுக்கு போகாமல் இருந்தால் என் பைக்குள் வைத்து என்னுடன் அனைத்து இடங்களுக்கு அழைத்துச் செல்வேன் என்கிறார். உங்களின் ஃபீலிங் எங்களுக்கு நன்றாக புரிகிறது என்கிறார்கள் தாய்மார்கள்.
காதல் கணவரான நிக் ஜோனஸுடன் சேர்ந்து எடுத்த முதல் புகைப்படத்தை தன் கைப்பையில் எப்பொழுதும் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் ப்ரியங்கா. அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாடகர் நிக் ஜோனஸுடன் ப்ரியங்கா சோப்ராவுக்கு காதல் ஏற்பட்டது.
காதல் வந்த கையோடு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். நிக் ஜோனஸை ஜிஜு என்று இந்தி ரசிகர்கள் பாசமாக அழைப்பதில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம். இந்தியாவில் என்னை ஜிஜு ஜிஜுனு அழைக்கிறார்கள் என்று பேட்டிகளில் தெரிவித்து வருகிறார் நிக்.

