சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இருப்பினும் தனி பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் வலதுசாரிகள், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
தவெக காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி
முதலமைச்சராக விதை பொறுப்பேற்று இரண்டு மாதங்களை நிறைவு செய்ய உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சனை,பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குதிரை பேரும் நடத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மறுபுறம் ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சிகளுக்கு தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் இடம் வழங்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி தவெக அரசு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வலிமைப்படுத்தும் நோக்கில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் நேற்று காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை அக்கட்சியின் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கேட்டார்.
உள்ளாட்சி தேர்தல் 30 % இட ஒதுக்கீடு பெற காங்கிரஸ் முடிவு
அப்போது உள்ளாட்சி தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் 30 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது திமுக கூட்டணியில் இருந்த போது கும்பகோணம் மேயர், காஞ்சிபுரம் துணை மேயர் என இரண்டு பதவிகள் தான் கிடைத்தன.
தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் இருப்பதால் மூன்று மேயர்கள் விதம் சென்னை துணை மேயர் உட்பட இரண்டு துணை மேயர்கள் என உள்ளாட்சி தேர்தலில் பதவிகளை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உள்ளாட்சியில் அனைத்து அமைப்புகளிலும் 30 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தவெகவுக்கு ஏற்படும் சிக்கல்:
தவெக ஒரு புதிய கட்சி என்பதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வார்டுகளில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கப் பல புதிய இளைஞர்களும் தொண்டர்களும் ஆர்வமாக இருப்பார்கள். 30% இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும்போது, தவெக தொண்டர்கள் போட்டியிட நினைத்த பல வார்டுகள் கைநழுவிப் போகும். இது உள்ளூர் மட்டத்திலுள்ள கட்சித் தொண்டர்களிடையே சோர்வையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.
உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட வாக்கு வங்கி எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் காட்டும் ஒரு களம். 30% வார்டுகளில் தவெக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிக்குப் விட்டுக்கொடுக்கும் போது, அந்தப் பகுதிகளில் கட்சியின் உண்மையான பலம் என்ன, மக்களுக்குக் கட்சி மீது இருக்கும் ஆதரவு எவ்வளவு என்பதைத் தவெக தலைமை கணிக்க முடியாமல் போகும்.
தமிழ்நாடு அரசியலில் வழக்கமாக திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தான் சிறிய கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும். தவெக தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாகத் தன்னை முன்னிறுத்த முயலும் வேளையில், ஆரம்பத்திலேயே மற்றொரு தேசியக் கட்சிக்கு 30% போன்ற பெரிய பங்கீட்டை வழங்குவது, தொகுதிகளைப் பேரம் பேசுவதில் தவெக-வின் பிடியைத் தளர்த்தலாம்.

