Dailyhunt
உங்கள் திருமணம் எப்படி நடைபெறும்? ஜாதக கட்டம் கூறும் தகவல்கள்!

உங்கள் திருமணம் எப்படி நடைபெறும்? ஜாதக கட்டம் கூறும் தகவல்கள்!

Samayam Tamil 3 weeks ago

திருமணம் என்பது உணர்வுப்பூர்வமான பந்தம் மட்டும் அல்ல, தனி ஒரு நபரின் பொருளாதார நிலை மற்றும் சமூக நிலையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.

தனி நபரின் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியை குறிக்கும் இந்த திருமணம், ஒரு சில கிரகங்களின் பார்வையால் கலவையான பலன்களை எதிர்கொள்ளலாம். அதாவது, உங்கள் வருங்கால வாழ்க்கை துணையின் வாழ்க்கை நிலையை அறிந்துக்கொள்ள உதவி செய்யும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, கிரகங்களின் நிலைபாடு, உங்கள் திருமணத்தை முடிப்பதில் தடைகளை கொண்டு வருமா? மாறாக திருமணத்தை சிறப்பாக செய்து முடிக்குமா? என்பதை புரிந்துக்கொள்ளவும் இது உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்ல, திருமணத்திற்கு பின்னர் தன் வாழ்க்கை தன்னுடன் எப்படி நடந்துக்கொள்வார், தனது வாழ்க்கை லட்சியத்திற்கு உதவி செய்வாரா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்ளவும் முடியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருமணத்தை விவரிக்கும் கட்டங்கள்!
தனி ஒரு நபரின் ஜாதகத்தில் 7-ஆம் வீடு கணவன் / மனைவி குணாதிசயங்களை பிரதிபலிக்கும். அதேநேரம் 8-ஆம் வீடு வருங்கால வாழ்க்கை நிலையின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க உதவி செய்யவும். மேலும் 11-ஆம் வீடு வருமானம் மற்றும் நிதி ஆதாயங்களை குறிப்பிடுகிறது. குறித்த இந்த வீடுகளின் கிரகங்களின் (குரு மற்றும் சுக்கிரன்) நிலைபாடு என்ன? கிரகங்களின் நிலை ஜாதகத்திற்கு உரியவரின் திருமண வாழ்க்கையில் உண்டாக்கும் மாற்றம் என்ன? என்பதை கணிக்க உதவி செய்கிறது.

  • உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தை பொறுத்து உங்கள் திருமணம் ஆடம்பரமாக நடக்குமா? அல்லது எளிமையாக நடக்குமா? என்பதை கணிக்க முடியும். அன்பு, செல்வம் மற்றும் உறவுகளை குறிக்கும் இந்த கிரகம் தான் ஆட்சி செய்யும் ராசிகளான ரிஷபம், துலாம் ராசியில் வலுவான நிலையில் இருந்தாலோ; அல்லது மீன ராசியில் உச்சம் பெற்று இருந்தாலோ உங்கள் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெறும். பணத்தை அதிகம் செலவு செய்து, மிகவும் பிரமாண்டமாக உங்கள் திருமணத்தை முடிப்பீர்கள்.
  • உங்கள் ஜாதகத்தில் 7வது மற்றும் 11-வது கட்டங்களுடன் ஆதாய வீடு இணைந்திருந்தால், திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும். குறிப்பாக, உங்கள் வருங்கால வாழ்க்கை துணையின் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், பொருளாதார நிலையும் மேம்படும்.
  • வேத ஜோதிடத்தில் குரு, வளர்ச்சி மற்றும் செழிப்பின் கிரகமாக பார்க்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் 7-வது வீட்டில் அல்லது அதற்கு அருகில் குரு இருந்தால் அது நல்ல ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் இருந்த கடன் பிரச்சனைகளை இந்த ஜாதக அமைப்பு முடித்து வைக்கும். அதாவது, கடன் பிரச்சனைகளை குறைத்து, நிம்மதியான வாழ்வு வாழ உதவி செய்யும்.
  • உங்கள் ஜாதகத்தில் 8-ஆம் ஸ்தானம் மிகவும் வலுவான நிலையில் இருப்பது, வாழ்க்கை துணையின் ஆதரவை குறிக்கிறது. பொருளாதார ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் உங்களுக்கு உற்ற துணையாகவும் அவர் இருப்பார். மேலும், புகுந்த வீட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் ஒரு ஜாதக அமைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ஜாதக அமைப்பு கொண்டிருக்கும் நபரை திருமணம் செய்வது, திருமணத்திற்கு பின் உங்களை செல்வந்தராக மாற்றும்.
  • உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் அல்லது 11-வது வீட்டில் ராகு இடம்பெறுவது, திடீர் உயர்வு, எழுச்சியை குறிக்கிறது. பொருளாதார ரீதியாக உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் எனவும் கூறுகிறது.

மறுபுறம், குறித்த இந்த 3 கட்டங்களை மட்டும் பார்ப்பது கூடாது. ஆரோக்கியமான திருமண வாழ்வுக்கு, முழுமையான ஜாதக அமைப்பதை ஆய்வு செய்வது அவசியம். தனி நபரின் தனித்துவமான ஜாதக அமைப்பை பொறுத்து, அவர்களுக்கான திருமண பலன்கள் மாறுபடலாம் எனவும் கூறப்படுகிறது. ஜோதிடத்தை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும், எதிர்காலத்தை கூறும் ஒரு முறையாக பயன்படுத்த கூடாது எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil