Dailyhunt
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி.  தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை!

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி. தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை!

Samayam Tamil 2 weeks ago

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேட்புமனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

தற்போது இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 10.40 லட்ச ரூபாய் என்றும், மனைவி கிருத்திகா உதயநிதிக்கு 2.92 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையிலுள்ள ரொக்கத்தை பொறுத்தவரை உதயநிதி ரூ.50,000, கிருத்திகா ரூ.75,000 ரூபாய் ஆகும்.

உதயநிதி வங்கி கணக்கு விவரம்கிருத்திகா வங்கி கணக்கு விவரம்
  • TMC வங்கி ரூ.14,56,155
  • ஆக்சிஸ் வங்கி ரூ.8,44,299
  • தேர்தல் செலவிற்கான TMC வங்கி ரூ.10,00,000
  • ஆக்சிஸ் வங்கி வைப்பீடு ரூ.2.28 கோடி
  • ஆக்சிஸ் வங்கி சேமிப்பு ரூ.31.10 லட்சம்
  • ஆக்சிஸ் வங்கி ரூ.2,736
  • TMC வங்கி ரூ.2.83 லட்சம்


உதயநிதி முதலீடுகள்

கிருத்திகா முதலீடுகள்
  • MF - ரூ.5.41 லட்சம்
  • பட்டியலிடப்பட்ட பங்குகள் ரூ.4,400
  • பட்டியலிடப்படாத பங்குகள் ரூ.16.5 லட்சம்
  • பட்டியலிடப்பட்ட பங்குகள் ரூ.9.47 லட்சம்
  • பட்டியிலிடப்படாத பங்குகள் ரூ.1,40 லட்சம்
  • ரெட் ஜெயிண்ட் மூவிஸ் முதலீடு ரூ.2.63 கோடி
  • ராஜ் புரோமோட்டர்ஸ் பிரைவேட் ரூ.5.76 கோடி
உதயநிதி இன்சூரன்ஸ்கிருத்திகா இன்சூரன்ஸ்
  • பிர்லா சன் லைன் - ரூ.8.65 லட்சம்
  • கோட்டக் லைப் - ரூ.3.31 லட்சம்
  • எல்.ஐ.சி - ரூ.1.64 லட்சம்
  • பிர்லா சன் லைன் - ரூ.8.65 லட்சம்
  • கோட்டக் லைப் - ரூ.3.31 லட்சம்
  • எல்.ஐ.சி - ரூ.1.64 லட்சம்


உதயநிதி, கிருத்திகா கார் மற்றும் நகை விவரங்கள்

உதயநிதியின் தனிப்பட்ட கடன் அல்லது முன்பண விவரங்களை பொறுத்தவரை ஸ்நோ அவுசிங் பிரைவேட் லிமிடெட் ரூ.10 கோடி, நடிகர் சங்க அறக்கட்டளை கடன் ரூ.1 கோடி என்றும், கிருத்திகாவிற்கு ஸ்நோ ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் ரூ.4.65 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து உதயநிதி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள டிஃபென்டர் கார், 23 லட்ச ரூபாய் மதிப்பிலான இன்னோவா கார் வைத்துள்ளார். இவரிடம் நகைகள் ஏதும் இல்லை. கிருத்திகாவிடம் 1.87 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய தங்க நகைகள் 1,600 கிராம் உள்ளது. ஒட்டுமொத்த அசையும் சொத்துகள் உதயநிதிக்கு 12 கோடி ரூபாயும், கிருத்திகாவிற்கு 13.25 கோடி ரூபாயும் இருப்பது தெரிய வருகிறது.

உதயநிதிக்கு சொந்தமான வேளாண்மை நிலமும், பிளாட்டும்

உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூர் தாலுகாவில் உள்ள உளுந்தை கிராமத்தில் வேளாண்மை நிலம் இருக்கிறது. இது 4.65 ஏக்கர், 2.01 ஏக்கர், 0.55 ஏக்கர், 3.26 ஏக்கர் என நான்கு பகுதிகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 5.1 கோடி ரூபாய் ஆகும். வேளாண்மை அல்லாத நிலம் என்று எடுத்துக் கொண்டால் வேளச்சேரி டாக்டர் சீத்தாபதி நகரில் பிளாட் நம்பர் 108 சொந்தமாக வைத்திருக்கிறார். 2,400 சதுர அடி கொண்ட இதன் மதிப்பு 1.18 கோடி ரூபாய். உதயநிதி ஸ்டாலின் சுயமாக வாங்கிய அசையா சொத்தின் மதிப்பு 7.72 கோடி ரூபாய். அதுவே அசையும் சொத்து மதிப்பு 12.92 கோடி ரூபாய். கிருத்திகாவின் அசையும் சொத்து13.25 கோடி ரூபாய் என்று வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil