Dailyhunt
UV சேதத்தை தடுக்கும், முடி உடைதலை குறைக்கும்: பாதாம் எண்ணெயை எப்படி சரியாக பயன்படுத்துவது?

UV சேதத்தை தடுக்கும், முடி உடைதலை குறைக்கும்: பாதாம் எண்ணெயை எப்படி சரியாக பயன்படுத்துவது?

Samayam Tamil 1 week ago

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய், UV சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு முடி உடைதலை குறைக்க உதவுகிறது.

இதை எப்படி சரியாக பயன்படுத்துவது மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்


முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் எண்ணெய் மிகச்சிறந்த தேர்வாகும். அதில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. ஆனால், சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காண முடியும்பாதாம் எண்ணெய் முடிக்கு அளிக்கும் நன்மைகள்

​International Journal of Trichology இதழில் வெளியான ஆய்வறிக்கைபடி, பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், கூந்தலை சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து பாதுகாக்க செய்கிறது.

மேலும், Emollient ஆக செயல்பட்டு, கூந்தலை மென்மையாக்குவதோடு வறண்ட கூந்தலை ஈரப்பதமாக்கிறது. இத்துடன் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து முடி உடைவதை குறைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதாம் எண்ணெய் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆனால், முடி உடைவதை தடுத்து, ஆரோக்கியமாக வைப்பதன் மூலம் முடி நீளமாக வளர உதவுகிறது.


பாதாம் எண்ணெய் பயன்படுத்தும் முறைகள் .

நேரடி உச்சந்தலை மசாஜ்

1 முதல் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கிகொள்ள வேண்டும். அதனை உச்சந்தலை மற்றும் தலையில் நேரடியாக தேய்க்கவும். குறிப்பாக நுனி பகுதிகளில் தேய்க்க வேண்டும்.

பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செயய் வேண்டும். குறைந்தது 1 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இறுதியாக, மைல்டு ஷாம்பு கொண்டு கழுவ செய்யலாம்

ஹேர் சீரம்

உள்ளங்கையில் 2-3 சொட்டுகள் மட்டும் பாதாம் எண்ணெயை எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் கைகளில் சீராக பரவும்படி இரண்டு உள்ளங்கைகளும் தேய்க்கவும்.

இப்போது முடியின் நுனிப்பகுதிகளில் மட்டும் தடவவும். முடிக்கு பளபளப்பை அளித்து சிக்கு முடி ஏற்படுவதை தடுக்கும்.

வாராந்திர ஹேர் மாஸ்க்

வாரத்திற்கு ஒரு முறை பாதாம் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலை மற்றும் முடியில் பயன்படுத்த வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு வாஷ் செய்யவும். கூந்தலுக்கு அதிக பலன்களை தரக்கூடும்.


எண்ணெய் வைக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்
  • அளவுக்கு அதிகமாக எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய் தூசியை ஈர்ப்பதோடு துளைகளை அடைக்கும்.
  • பல நாட்கள் எண்ணெயை கழுவாமல் அப்படியே தலையில் வைத்தால், அழுக்கு படிந்து பொடுகு தொல்லை ஏற்படும்.
  • எண்ணெய் தேய்த்த பிறகு ஷாம்பு போடாமல் இருப்பது தவறாகும். முடி கனமாக தோன்றுவதோடு தலை ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
  • அழுக்கான கூந்தலில் எண்ணெய் வைப்பது மற்றொரு தவறாகும். ஓரளவு சுத்தமான கூந்தலில் தான் எண்ணெய் நன்றாக உறிஞ்சக்கூடும்.

பாதாம் எண்ணெய் யார் வைக்கலாம்? யார் தவிர்க்கலாம்?

வறண்ட மற்றும் சிக்கு முடி கொண்டவர்கள், நுனி முடி பிளவு இருப்பவர்கள், சுருட்டை முடி இருப்பவர்கள், கரடுமுரடான மேற்பரப்பு கொண்டவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்த செய்யலாம்.

எண்ணெய் பிசுபிசுப்பு கூந்தல் மற்றும் நட்ஸ் அலர்ஜி இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் பயன்பாட்டை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உச்சந்தலையில் தொற்று அல்லது கடுமையான பொடுகு பிரச்சனை இருந்தாலும் தவிர்ப்பது நல்லது. உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் முதலில் சிறிது இடத்தில் தடவி Patch Test செய்துகொள்வது சிறந்த முடிவாகும்.

முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக பாதாம் எண்ணெய் கருத முடியாது. ஆனால், முடி உடைதலை தடுத்தல், முடியை மென்மையாக்குதல் என ஒட்டுமொத்த முடி மேற்பரப்பை மேம்படுத்த சிறந்த தேர்வாக திகழ்கிறது.

தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலனை காண முடியும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil