Dailyhunt
உழைப்பால் உயரும் உலகுக்கு ஒரு சல்யூட்! - மே தினத்தின் வீர வரலாறு

உழைப்பால் உயரும் உலகுக்கு ஒரு சல்யூட்! - மே தினத்தின் வீர வரலாறு

Samayam Tamil 1 week ago

வ்வொரு ஆண்டும் மே முதல் தேதி, ஜாதி, மத, இன எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தால் கொண்டாடப்படும் ஒரு உன்னதமான நாள்.

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகள் சும்மா கிடைத்துவிடவில்ல. அதற்குப் பின்னால் பல உயிர்களின் தியாகமும், பல ஆண்டுகாலப் போராட்டமும் உள்ளது.


மே தினம் - சர்வதேச வரலாறு

சிகாகோ முதல் உலகம் வரை19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தினசரி 12 முதல் 16 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டனர். இந்தச் சுரண்டலை எதிர்த்து, எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையுடன் 1886-ஆம் ஆண்டு மே 1-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது.சிகாகோவின் ஹேமார்க்கெட் (Haymarket) சதுக்கத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து, உழைப்பாளர்களின் கோரிக்கைகள் உலகம் முழுவதும் எதிரொலித்தன.

1889-ல் பாரிஸில் நடந்த மாநாட்டில், இந்தத் தியாகங்களை நினைவுகூரும் வகையில் மே 1-ஆம் தேதி 'சர்வதேச உழைப்பாளர் தினமாக' அறிவிக்கப்பட்டது.


மே தினம் - இந்திய வரலாறு

தமிழ்நாட்டின் சிக்னேச்சர் சாதனைஇந்தியாவிலேயே முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடிய பெருமை நமது தமிழ்நாட்டையே சாரும். 1923-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி, இந்தியாவின் முதல் மே தின விழாவைச் சென்னையில் சிங்காரவேலர் முன்னின்று நடத்தினார். மெரினா கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலைக்கு அருகில் முதல்முறையாக உழைப்பாளர் கொடி ஏற்றப்பட்டது. தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அன்றே முதன்முதலில் வைக்கப்பட்டது.உழைப்பாளர் சிலையின் முக்கியத்துவம்சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் உள்ள 'உழைப்பாளர் சிலை' (Triumph of Labour), 1959-ஆம் ஆண்டு மே தினத்தின் போது திறக்கப்பட்டது. இது உழைப்பவர்களின் விடாமுயற்சியையும், கூட்டு உழைப்பையும் உலகுக்குச் பறைசாற்றுகிறது.

உழைப்புதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. தகவல் தொழில்நுட்பம் முதல் விவசாயம் வரை, துப்புரவுப் பணி முதல் மருத்துவம் வரை ஒவ்வொரு துறையிலும் உழைப்பவர்களின் கரங்களே உலகை இயக்குகின்றன. மே தினம் என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல; அது ஒவ்வொரு தொழிலாளியின் சுயமரியாதையையும், வலிமையையும் போற்றும் நாள்.உழைப்பால் இந்த உலகை அழகாக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகள்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil