Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வார அதிர்ஷ்ட ராசிபலன் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6, 2026: புதாதித்ய யோகத்தால் 5 ராசிகளுக்கு சாதகமான பலன்கள்

வார அதிர்ஷ்ட ராசிபலன் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6, 2026: புதாதித்ய யோகத்தால் 5 ராசிகளுக்கு சாதகமான பலன்கள்

Samayam Tamil 6 days ago

ந்த வாரத்தில் நடக்கக்கூடிய கிரகம் வெளியில் மாற்றங்களால் 12 ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்த வாரத்தில் உருவாக்கக்கூடிய புதாதித்ய யோகம், கஜகேசரி யோகம் உள்ளிட்ட யோகங்களால் சில ராசிகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட போகிறது. இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள் எவை என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.


ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5, 2026 வரையிலான இந்த வார காலத்தில் மிருகங்களின் அமைப்பு மற்றும் சேர்க்கைகளால் உருவாகக்கூடிய யோகத்தின் அடிப்படையில் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பான காலமாக அமையப் போகிறது. சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் புதனுடன் சேர்ந்து இருப்பதால் 'புதாதித்ய யோகத்தை' உருவாக்கும். அதே சமயம் குரு கடகத்தில் உச்சம் பெற்றும், செவ்வாய் மிதுனத்திலும், சனி மீனத்திலும் என சஞ்சரிப்பார்கள். இந்த கிரகங்களின் அடிப்படையில் 5 ஐந்து ராசிகளுக்கான அதிர்ஷ்டமாக அமைகிறது.மேஷம் அதிர்ஷ்ட வார ராசிபலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பான பலன்களை தரும். குறிப்பாக உங்களுடைய தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக பெரும் வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்களுடைய பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். மேலும் உங்களின் திறமைக்கேற்ற பதவி உயர்வு, வருமான உயர்வு போன்ற விஷயங்கள் நடக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல சூழல் ஏற்படும். இந்த வாரத்தில் உங்களுடைய உடல் நலம் முன்னர்விட வெகுவாக மேம்படும்.
செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகள் விலக வாய்ப்பு உண்டு. இந்த காலத்தில் திடீர் பணவரவு அல்லது முந்தி ஆதாயங்கள் ஏற்படக்கூடிய நல்ல யோகம் உருவாகும். உங்களுடைய நிதிநிலை நிர்வாக முன்னேற்றம் ஏற்படும்.


சிம்மம் அதிர்ஷ்ட வாரம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக அமையும். இந்த காலத்தில் உங்களுடைய நிதிநிலை மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களை நல்ல மாற்றங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவதற்கு நல்ல சூழல் உருவாகும். பணியிடத்தில் சிரமங்கள் நீங்கும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.
உங்களுடைய துணை இடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறது. மேலும் இந்த வார்த்தை சுப யோகங்கள் காரணமாக உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள். காதல் உறவில் இருப்பவர்கள் அதை திருமணத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.


கன்னி அதிர்ஷ்ட வாரம் ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் அற்புதமான வாய்ப்புகளை தரக்கூடியதாக இருக்கும். பழைய மனக்கசப்புகள் மற்றும் தவறான புரிதல் அனைத்தும் நீங்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு காரணமாக மன அமைதி கிடைக்கும்.
உங்களுடைய துணை உடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும், பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான நல்ல சூழலும், அதற்கான நிதி நிலையும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய வருமானம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் நான் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். இந்த வாரத்தில் சில விருந்தினர்களின் வருகை உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும்.


விருச்சிக அதிர்ஷ்ட வாரம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உங்களுடைய உடல் நலம் தொடர்பாக இருந்த தொந்தரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பேச்சு மற்றும் எழுத்துத் துறையில் தொடர்பான நபர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர்களிடம் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் சில வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
உங்கள் துணையுடன் மறக்க முடியாத சில நினைவுகளை ஏற்படும் நல்ல விஷயங்கள் நடக்கும். சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகள் உண்டு. சரியான பயணங்கள் மேற்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெறக்கூடிய யோகம் உண்டு. இதனால் நீண்ட நாள் மனக்கவலை உலகம். உங்கள் செயல்களில் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்து பணிகள் அனைத்தும் இந்த காலத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.


மீன அதிர்ஷ்ட வாரம் ராசி பலன்

மீன ராசி நண்பர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்களுடைய செலவுகள் குறையும். உங்களுடைய நிதிநிலை மற்றும் பொருளாதார தொடர்பான நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நல்ல நிலையில் இருப்பீர்கள். உங்களுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களில் செலவிடக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்கக் கூடிய முயற்சியில் இருந்தால், தற்பொழுது உங்கள் முயற்சி கை கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கம் நிலவும். உங்களுடைய காதல் உறவில் முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய வேலை, பொறுப்புகள், பட்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளை காண்பீர்கள். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil