சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் சூடுபிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளது.
இது விநியோகம் குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. அமெரிக்கா - ஈரான் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முற்றுகை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் முடங்கியிருப்பது ஆகியவை சந்தையை நிலைகுலையச் செய்துள்ளன. இந்த நிலைமை மேம்படவில்லை என்றால் எண்ணெய் விலைகள் மேலும் கடுமையாக உயரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு பேரலுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்த உயர்வுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றமே ஆகும்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், உலகின் எண்ணெய் விநியோகத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் ஒரு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஒரு முரண்பாடு நீடிக்கிறது. ஏப்ரல் 30ஆம் தேதியறு ஜூன் மாத விநியோகத்திற்கான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.96 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 120 டாலரை எட்டியது.
PF உறுப்பினர்களுக்கு புதிதாக வரும் வெப்சைட் E-PRAAPTI.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?
அதே நேரத்தில், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலையும் 107 டாலருக்கு மேல் நீடித்தது. புதன் கிழமையன்றும் சந்தையில் ஒரு வலுவான ஏற்றம் காணப்பட்டது. அன்று பிரென்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 6 சதவீதம் மற்றும் WTI 7 சதவீதம் உயர்ந்தன.
வங்கியில் வாங்கிய கடனை இப்படியெல்லாம் வசூல் செய்வார்களா? PF, PPF கணக்கில் உள்ள பணத்துக்கு பாதுகாப்பு இருக்கா?
எதிர்காலத்தில் சந்தை எப்படி இருக்கும்?
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தடை தொடர்ந்தாலும், சேமிப்புத் திறன் குறைவாகவே இருந்தாலும் விநியோக நிலைமை மோசமடையலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் அமைப்பிலிருந்து விலகுவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முயன்றாலும், அதன் தாக்கம் உடனடியாகத் தெரியாது. எதிர்காலக் கண்ணோட்டத்தைப் பார்க்கும்போது, அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் முன்னேறத் தவறினாலோ, பதற்றம் அதிகரித்தாலோ கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலரை எட்டக்கூடும் என்று பல நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு!
குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தியின் நீண்டகால மூடல் உலகளாவிய சந்தைக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையலாம் என்கின்றனர். ஏனெனில் தினமும் சுமார் 20 மில்லியன் பேரல்கள் எண்ணெய் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறது. எனவே, விநியோகத் தடைகள் நேரடியாக விலைகளை மேலும் உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும் போது அது இந்தியாவிலும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனெனில், இந்தியா தனது எண்ணெய் தேவையில் பெருமளவு இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. எனவே தற்போதைய விலையேற்றம் இந்தியாவையும் கடுமையாகப் பாதிக்கும்.

