Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாட்டர் பாட்டிலில் வீசும் கெட்ட வாடை அகற்ற சில சிம்பிள் ட்ரிக்ஸ்

வாட்டர் பாட்டிலில் வீசும் கெட்ட வாடை அகற்ற சில சிம்பிள் ட்ரிக்ஸ்

Samayam Tamil 4 months ago

சிலர் ஒரே பாட்டிலை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது வழக்கம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி மோசமான வாடை வர காரணமாகும்.

பாட்டிலில் வீசும் நாற்றத்தை நீக்க உதவும் பேக்கிங் சோடா, வினிகர் வீட்டு முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்


தாகத்தை தணிக்க உதவும் வாட்டர் பாட்டில், நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அலுவலகம், பள்ளி, பயணங்கள் என எங்கு சென்றாலும் பையில் தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம்

ஆனால் ஒரே பாட்டிலை பல நாட்கள் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது துர்நாற்றத்தை வரவழைக்கும். இதற்கு பாக்டீரியா வளர்ச்சி, ஈரப்பதம் மற்றும் பானங்களின் மிதமுள்ள கழிவுகள் போன்றவை காரணமாக இருக்கலாம்

சில எளிய வீட்டு முறைகள் மூலம் பாட்டிலில் வீசும் துர்நாற்றத்தை எளிதாக சரிசெய்திட முடியும். அதனை அறிவியல் விளக்கத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்தண்ணீர் பாட்டிலில் நாற்றம் வர காரணங்கள்
  • பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி
  • பாட்டில் உட்புறம் உருவாகும் நுண்ணுயிர் படலம்
  • ஜூஸ், புரோட்டீன் ஷேக் அல்லது ஃப்ளேவர் வாட்டர் மிச்சங்கள்
  • கழுவிய பிறகு சரியாக உலர வைக்காதது
  • ஈரப்பதம் மற்றும் வெப்பமான சூழலில் நுண்ணுயிர்கள் வேகமாக பெருகும். இதுவே பாட்டிலில் கெட்ட வாடை அடிக்க காரணமாகும்

பேக்கிங் சோடா கிளீனிங்

பேக்கிங் சோடா, இயற்கையாக சுத்திகரிப்பு பொருளாகும். சோடியம் பைக்கார்பனேட் உள்ளடக்கம், நாற்றத்தை ஏற்படுத்தும் அமில வாசனை மூலக்கூறுகளை நடுநிலையாக்கி பாட்டிலுக்குள் இருக்கும் எச்சங்களை உடைக்க உதவுகிறது.

  • பாட்டிலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும்
  • பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பிவிட்டு, நன்றாக குலுக்க வேண்டும்
  • 30 நிமிடங்கள் அப்படியே வைத்தப்பிறகு தண்ணீரில் கழுவவும்

வினிகர் கிருமி நாசினி

வெள்ளை வினிகர், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். அதில் அசிட்டிக் அமிலம் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சி தடுக்கவும், கனிம படிவுகளைக் கரைக்கவும் உதவும்

  • பாதி பாட்டிலுக்கு வெள்ளை வினிகரை நிரப்ப வேண்டும்
  • மீதிக்கு வெதுவெதுப்பான நீரை சேர்க்க வேண்டும்
  • இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும்

சூரிய ஒளியில் உலர்த்தவும்

வாட்டர் பாட்டிலை கழுவிய பிறகு சூரிய ஒளியில் உலரவைக்க வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள், நுண்ணுயிர் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் பாக்டீரியா வாழ்வதற்கு தேவையான ஈரப்பதத்தை குறைக்கக்கூடும்


பாட்டிலில் நாற்றத்தை தடுக்க சில டிப்ஸ்
  • தினமும் வாட்டர் பாட்டிலை கழுவ வேண்டும்
  • வாட்டர் பாட்டில் மூடும் முன்பு நன்றாக உலர்த்தவும்
  • புரோட்டீன் ஷேக் அல்லது ஜூஸ் மிச்சங்களை நீண்ட நேரம் இருக்கக்கூடாது
  • பாட்டில் மூடி மற்றும் ஸ்ட்ரா பகுதியில் அதிக கவனம் செலுத்தவும்
  • பாட்டில் உட்புறத்தை சுத்தம் செய்ய பாட்டில் பிரஷ் பயன்படுத்த செய்யலாம்

பாட்டிலில் நிறைய கீறல்கள் இருந்தால், சுத்தம் செய்தப்பிறகு நாற்றம் மீண்டும் வந்தால், பிளாஸ்டிக் மிகவும் பழையதாக தோன்றினால், பாட்டிலை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பாட்டிலை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil