Dailyhunt
வீட்டில் அதிக கிருமிகள் இருக்கும் பொருள்; பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை எப்போது மாற்ற வேண்டும்?

வீட்டில் அதிக கிருமிகள் இருக்கும் பொருள்; பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை எப்போது மாற்ற வேண்டும்?

Samayam Tamil 4 days ago

கிச்சன் ஸ்பாஞ்சில் ஈரப்பதம் மற்றும் உணவுத் துகள்கள் காரணமாக, ஆபத்தான பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர்கின்றன.

அவை பாத்திரங்கள் அல்லது சமையலறை மேசையில் பரவி, தேவையற்ற உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். அவற்றை எப்போது மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை இங்கே காணலாம்


சமையலறையில் நாம் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் (Sponge), பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும், உண்மையில் வீட்டில் உள்ள மிக அழுக்கான பொருட்களில் இதுவும் ஒன்று என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றை அடிக்கடி மாற்றவில்லை என்றால் , உங்க பாத்திரங்கள் மற்றும் சமையலறை மேசையில் பாக்டீரியா பரவுவதற்கு வழிவகுக்க நேரிடும்கிச்சன் ஸ்பாஞ்ச் பாக்டீரியா இருப்பிடமாக மாற காரணங்கள்
  • ஈரப்பதம், உணவு துகள்கள் மற்றும் வெப்பநிலை காரணமாக, நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பெருக கிச்சன் ஸ்பாஞ்ச் சிறந்த இடமாக திகழ்கிறது.
  • ​Scientific Reports இதழில் வெளியான ஆய்வின்படி, கிச்சன் ஸ்பாஞ்ச்கள் பாக்டீரியாக்கள் தங்கிப் பெருகும் நுண்ணுயிரி ஹாட்ஸ்பாட்டாக திகழ்கின்றன. பாத்திரம் கழுவும்போது பிற இடங்களுக்கு நுண்ணுயிரிகளை பரப்பும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • American society for microbiology தளத்தில் வெளியான ஆய்வின்படி, E. coli, Salmonella, மற்றும் Staphylococcus aureus போன்ற பாக்டீரியாக்கள், கிச்சன் ஸ்பாஞ்ச்களில் 16 நாட்கள் வரை உயிர்வாழக்கூடியவை என உறுதியாகியுள்ளது.​

கிச்சன் ஸ்பாஞ்ச் எப்போது மாற்ற வேண்டும்?

பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்களை, ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

ஒருவேளை, இறைச்சி உணவை கையாண்டிருந்தால் அல்லது ஒரே நேரில் பல முறை பாத்திரத்தை கழுவும் பட்சத்தில், வாரத்திற்கு ஒருமுறை மாற்றுவது அவசியமாகும்.

கிச்சன் ஸ்பாஞ்ச் சுத்தம் செய்வது தற்காலிக தீர்வு மட்டுமே ஆகும். அவை நுண்ணுயிரிகளை முழுமையாக வெளியேற்ற செய்யாது. புதிதாக மாற்றுவது மட்டுமே ஒரே தீர்வாகும்.


பழைய ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதன் ஆபத்துகள்
  • அழுக்கான ஸ்பாஞ்ச் மூலம் பாக்டீரியாக்கள், கிச்சன் முழுவதும் பரவலாம். அவை தட்டுகள், கரண்டிகள் மற்றும் சமையலறை மேசைகளில் தங்கி விடும்.
  • இது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக வயிற்றுப்போக்கு, சரும நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • ஒரு இடத்தில் உள்ள கிருமிகள் ஸ்பாஞ்ச் வழியாக மற்றொரு இடத்துக்கு எளிதாக பரவும். உதாரணமாக, இறைச்சி கழுவிய பாத்திரத்தில் இருக்கும் கிருமிகள், ஸ்பாஞ்ச் மூலம் காய்கறி வெட்டும் பலகை அல்லது தண்ணீர் குடிக்கும் டம்பளருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.​

ஸ்பாஞ்ச் உடனடியாக மாற்ற வேண்டிய அறிகுறிகள்
  • ஸ்பாஞ்ச் வாஷ் செய்த பிறகு புளித்த அல்லது விரும்பதக்காத வாசனை வருதல்.
  • ஸ்பாஞ்ச் கிழிந்து போவது அல்லது தொடும்போது பிசுபிசுப்பாக இருப்பது.
  • ஸ்பாஞ்ச் நிறம் மங்குவது அல்லது கருப்பு நிற புள்ளிகள் தோன்றுவது.

இந்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், ஸ்பாஞ்ச் பயன்படுத்த ஆரம்பித்த ஓரிரு நாட்களே ஆகியிருந்தாலும் மாற்றிவிடுவது நல்லது.


ஸ்பாஞ்ச் நீண்ட நாள் பயன்படுத்த டிப்ஸ்
  • பாத்திரங்களைக் கழுவி முடித்ததும், ஸ்பாஞ்சை நன்றாக அலச வேண்டும். குறிப்பாக ஸ்பாஞ்சில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நீக்கவும்.
  • பயன்படுத்திய பிறகு ஸ்பாஞ்சில் உள்ள தண்ணீரை முழுமையாக பிழிந்து நீக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரக்கூடும்.
  • ஸ்பாஞ்சை கிச்சன் சிங்க் உள்ளே போட்டு வைக்கக்கூடாது. காற்றோட்டமான மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கவும். சிறிய ஸ்டாண்டில் கூட வைக்க செய்யலாம்.
  • தண்ணீரில் கொதிக்க வைத்தல் அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்வது தற்காலிக தீர்வை அளிக்கும். ஆனால் நிரந்திர தீர்வு ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil