Dailyhunt
விஜய் பதவியேற்பு விழா திடீர் நிறுத்தம்.. ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தாரா? - வெளியாகும் தகவல்கள்!

விஜய் பதவியேற்பு விழா திடீர் நிறுத்தம்.. ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தாரா? - வெளியாகும் தகவல்கள்!

Samayam Tamil 1 week ago

மிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் இந்த எண்ணிக்கை போதாது. கூடுதலாக 11 இடங்கள் தேவை. இந்த நிலையில் தான் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவுக்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் தமிழக வெற்றிக்கழகம் சிக்கலில் உள்ளது.

தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல்

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அது போல் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்எல்ஏ காமராஜரின் தமிழக வெற்றிக்கலாகத்திற்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது .இந்த முயற்சிகள் ஒரு வேலை சாதகமாக முடிந்தால் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் இருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் நேற்று சென்றிருந்தார். அப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து பேசினார். தற்போது ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களில் ஆதரவுகள் இருக்கும் கடிதத்தை விஜய் ஆளுனரிடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மீதமுள்ள எம்எல்ஏக்களில் ஆதரவு கடிதத்தை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கேட்கும் விஜய்

இதன் காரணமாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தீவிர ஆலோசனையில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே தமிழக வெற்றி கணக்கு தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நீ ஏழாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக வழி விளையாட்டரங்கில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தது ஆட்சி அமைப்பதற்கான சட்டபூர்வமான நிகழ்வுகள் ஏதும் நடக்காத சூழலில் பொதுத்துறை இப்படி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருவதை ஆளுநர் அருளிய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் பதவியேற்பு விழா திடீர் நிறுத்தம்

இதனை அறிந்த ஆளுநர் கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலர் சாய்குமார் மற்றும் காவல்துறை இயக்குனர் சந்திப்பாய் ரத்தோட் ஆகியோரை அழைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆட்சி அமைப்பது தொடர்பான எந்த சட்ட பூர்வ நிகழ்வுகளும் நடக்காத நிலையில் யாரை கேட்டு இப்படி எல்லாம் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன? விழா நடத்த வேண்டும் என்றாலும் வழக்கமான நடைமுறை.

ஆளுநர் அலுவலக வளாகத்தில் தானே நடத்துவது வழக்கம் இந்த முறை மட்டும் ஏன் நேரு உள் விளையாட்டு அரங்கில் மாற்றியது ஏன் உடனே அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்துங்கள் என ஆளுநர் ஆவேசமாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விழா ஏற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அதேபோல் உளவுத்துறைக்கு இரு அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டதற்கும் ஆளுநர் டிஜிபி இடம் கோபப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil