Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் - எடப்பாடி கூட்டணி ஆட்சியா? தவெக 118 மெஜாரிட்டி நம்பரை தொட உள்ளே வரும் கட்சிகள்!

விஜய் - எடப்பாடி கூட்டணி ஆட்சியா? தவெக 118 மெஜாரிட்டி நம்பரை தொட உள்ளே வரும் கட்சிகள்!

Samayam Tamil 2 weeks ago

2026 தமிழக சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) காலை முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான எக்ஸிட்போல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வெளிவந்தன.

ஆனால் கள நிலவரம் அப்படி சொல்லவில்லை. பிற்பகல் நிலவரப்படி, தவெக 107, அதிமுக 68, திமுக 59 என முன்னிலை வகிக்கின்றனர். நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு 118 இடங்கள் தேவை. ஆனால் தற்போதைய சூழலில் தவெக ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இறுதி முடிவுக்கு வர முடியாது. இருப்பினும் விஜய் யாருடன் கைகோர்த்து ஆட்சி கட்டிலை நோக்கி நகர்வார் என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் குறிக்கோளாக இருந்தது. மேலும் திமுக vs தவெக இடையில் தான் போட்டி என்று தெளிவான வரையறையை சரியாக செட் செய்து காய் நகர்த்தினர். அதற்கான பலன்களை இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்?

  • அதிமுக உடன் கைகோர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டாம் இடத்தில் 68 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே கூட்டணியாக சேரும் போது 107+68 என 175 இடங்களை பிடிக்கும் நிலை ஏற்படும். எனவே மிக எளிதாக மெஜாரிட்டி மார்க்கை தாண்டி விடலாம். ஆனால் விஜய் இந்தளவிற்கு இறங்கி வருவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 15 இடங்கள் கிடைத்தால் போதும். இத்தகைய சூழலில் சிறிய கட்சிகள் யாராவது வந்தால் போதும் என எதிர்பார்க்கலாம்.
  • அதிமுக தரப்பை பார்த்தால் பாமக 6, அமமுக 1 என முன்னிலை பெற்றுள்ளது.
  • பாஜக கொள்கை எதிரி என்பதால் அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

எனவே சிறிய கட்சிகளின் முடிவுகள் முதலில் முழுமையாக தெரிய வேண்டும். அதைப் பொறுத்து தான் தவெகவும் காய் நகர்த்தும். சிறிய கட்சிகளும் காய் நகர்த்தும். அதேசமயம் வாக்கு வித்தியாசம் என்பது பல இடங்களில் மிகக் குறைவாக இருக்கிறது. எனவே கடைசி நேர திருப்பமாக இரண்டு விஷயங்கள் நடக்கலாம்.

தவெக தனிப் பெரும்பான்மை பெறுமா?

  1. தவெக 118 இடங்களை கடந்து தனிப் பெரும்பான்மை பெறலாம்
  2. 100 இடங்களுக்கும் கீழ் குறைந்து மெஜாரிட்டி மார்க்கை தொட முடியாமல் போகலாம்

இதில் தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் தவெக உடன் கூட்டணி அமைக்காவிட்டாலும் சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம். இதுவும் ஆட்சி அமைக்க மெஜாரிட்டியை அளிக்கும். ஆனால் 100 முதல் 108 தொகுதிகள் வரை எண்ணிக்கையில் மாறி மாறி தவெக சென்று கொண்டிருக்கிறது.

வெற்றி கணக்கை தொடங்கிய தவெக வேட்பாளர்கள்

இதற்கிடையில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்று விட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்கள்
மதுரை தெற்குகோபீசன்
தூத்துக்குடிஸ்ரீநாத்
தாம்பரம்சரத்
தஞ்சாவூர்விஜய் சரவணன்
கோபிசெட்டிப்பாளையம்செங்கோட்டையன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil