தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வருகின்றது. பெரும்பாலானோர் எதிர்பார்க்காத ஒரு முடிவு தான் இந்த தேர்தலில் கிடைத்துள்ளது.
பாரம்பரியமான திமுக மற்றும் அதிமுக ஆகிய காட்சிகளை பின்னுக்கு தள்ளி தவெக சாதித்து இருக்கின்றது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கின்றார். தவெக இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை, வேண்டுமானால் அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.வாக்குகளை பிரிக்க முடியும்.
மற்றபடி தவெக பத்து சீட்டுகள் கூட வெற்றிபெறாது என்றெல்லாம் சிலர் விமர்சித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியது. தவெக 108 இடங்களில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது.தவெக என்ற கட்சி துவங்கி இரண்டே வருடங்களில் ஆட்சிக்கு வந்தது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக தான் இருக்கின்றது.
தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக35 % வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தவெகவிற்கு மக்கள் வாக்களிக்க என்ன காரணம் ? என்பது குறித்து பல விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றது. அதில் பெரும்பாலானோர், மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கின்றனர். அதன் காரணமாக தான் தவெக இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கின்றனர் என்கின்றனர்.
இதே கருத்தை தான் தற்போது பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கின்றார். இதுகுறித்து அவர் பேசியது என்னவென்றால், தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்திருக்கின்றனர். அதன் காரணமாக தான் தவெக வெற்றிபெற்றுள்ளது. விஜய்க்கு வாக்களித்தவர்களை நாம் உதாசீனப்படுத்த கூடாது. மக்களின் மனநிலை தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்பது. அந்த மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்.
அதே சமயத்தில் இது ஒரு மிகப்பெரிய சுனாமி ஒன்றும் கிடையாது. அப்படி இது ஒரு சுனாமி என சொன்னால் தவெகவிற்கு 160 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 108 இடத்தில் தான் தவெக வெற்றிபெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தவெக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
ஆனால் இதையெல்லாம் தற்போது பேசி ஒரு பயனும் இல்லை. தேர்தல் முடிந்துவிட்டது.ஒரு கட்சியின் வெற்றி தேர்தலில் அல்ல. மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்து தான் அக்கட்சியின் வெற்றி உள்ளது. ஆனால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் பலமுறை போராடி இருக்கின்றோம். அது தற்போது நடந்து வருகின்றது.
அரசியலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதும், மக்கள் மாற்றத்தை விரும்புவதும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது என பேசினார் அன்புமணி. இந்நிலையில் ஒரு சிலர் அன்புமணியின் இந்த பேச்சை கேட்டு அவர் பரப்புரையில் பேசியதை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது அன்புமணி தனது பரப்புரையில், தவெகவிற்கு வாக்களித்து உங்களது வாக்குகளை வீண் செய்யாதீர்கள் என பேசியிருந்தார்.
விஜய் இந்த தேர்தலில் ஓரளவிற்கு வாக்குகளை பெறுவாரே தவிர வெற்றிபெற மாட்டார். எனவே அவருக்கு வாக்களித்து உங்களுடைய வாக்குகளை வீணடிக்காதீர்கள். உங்களது வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்குங்கள் என பேசியிருந்தார். தற்போது மக்கள் மாற்றத்தை கொண்டு வர நினைத்துள்ளார்கள். எனவே அவர்களது தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என கூறியிருக்கின்றார்.
இதனை குறிப்பிட்டு சிலர் அன்புமணியின் கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் பெரும்பாலானோர் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்ற கருத்தை தான் முன் வைத்து இருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். எனவே ஒரு மாறுதல் வேண்டும் என கருதிய மக்கள் தவெகவை வெற்றிபெற செய்திருப்பதாக பலர் சொல்கின்றனர். இதே கருத்தை தான் பாமக தலைவர் அன்புமணியும் தெரிவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

