Dailyhunt
விஜய்க்கு வந்த சிக்கல்? - பெரம்பூர் தொகுதியில் கடைசி நேர மூவ்! பிழைகளைச் சரிசெய்த தவெக தலைவர்

விஜய்க்கு வந்த சிக்கல்? - பெரம்பூர் தொகுதியில் கடைசி நேர மூவ்! பிழைகளைச் சரிசெய்த தவெக தலைவர்

Samayam Tamil 1 week ago

மிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், இன்று பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் கூடுதல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அவரது வேட்புமனுக்களில் இருந்த முரண்பாடுகள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கூடுதல் மனு தாக்கல் ஏன்?

மார்ச் 30 அன்று பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்த முதல் வேட்புமனுவில், தன் மீது வழக்குகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஏப்ரல் 1 அன்று திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில், 2025-ல் மதுரையில் பதிவான ஒரு வழக்கு மற்றும் சென்னையில் பதிவான ஒரு வழக்கு என இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் முரண்பாட்டால் பெரம்பூர் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் எனப் பேச்சு எழுந்த நிலையில், இன்று கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வயது முரண்பாடும் சரிசெய்யப்பட்டது

பெரம்பூர் மனுவில் தனது வயது 52 என்றும், திருச்சி மனுவில் 51 என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தார். இந்த ஒரு வயது வித்தியாசமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இன்றைய கூடுதல் மனுவின் மூலம் தனது சரியான வயதையும், விடுபட்ட வழக்கு விவரங்களையும் விஜய் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளார்.


தவெக தரப்பு விளக்கம்

மதுரை வழக்கு தொடர்பாக முறைப்படி சம்மன் எதுவும் வரவில்லை என்பதால் முந்தைய மனுவில் அது விடுபட்டது. தற்போது விவரங்கள் அறியப்பட்டவுடன், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி (ஏப்ரல் 6-க்குள் திருத்த அனுமதி உண்டு) கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என தவெக சட்டப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் களம் சூடுபிடிப்பு

வேட்புமனுவில் இருந்த பிழைகளைச் சரிசெய்துள்ளதால், விஜய்யின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் பெரம்பூர் தொகுதியில் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்

  • விஜய் (கட்சித் தலைவர்) : சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
  • 'புஸ்ஸி' என். ஆனந்த் (பொதுச் செயலாளர்): சென்னை தி. நகர் (T. Nagar) தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ஆதவ் அர்ஜுனா (தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர்): சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்குகிறார்.
  • கே.ஏ. செங்கோட்டையன் (முன்னாள் அதிமுக அமைச்சர்): தனது சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.
  • பி. வெங்கடரமணன் (பொருளாளர்) : சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கு.ப. கிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்): திருச்சி லால்குடி தொகுதியில் களம் காண்கிறார்.
  • சி.டி.ஆர். நிர்மல் குமார் (இணைப் பொதுச் செயலாளர்) : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ராஜ்மோகன் (துணைப் பொதுச் செயலாளர்/இயக்குநர்): சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் களம் இறங்குகிறார்.
  • ஜே.சி.டி. பிரபாகரன் (முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்) : சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil