விஜய், த்ரிஷா: தற்போது எல்லாம் நடிகர்கள், நடிகைகளுக்கு இன்ஸ்டாகிராமில் எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார், யாரை எல்லாம் ஃபாலோ செய்கிறார்கள் என்பது ரசிகர்களால் மட்டும் அல்ல திரையுலகினராலும் கவனிக்கப்படுகிறது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் 15.9 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். பலர் அவரை பின்தொடர்ந்தாலும் இன்ஸ்டாவில் அவர் யாரையும் இதுவரை ஃபாலோ செய்யவில்லை. இந்நிலையில் தான் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷயம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் 293 பேரை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார் த்ரிஷா கிருஷ்ணன். ஆனால் அந்த 293 பேரில் நடிகர் விஜய் இல்லை. நல்ல நண்பரான விஜய்யை ஏன் த்ரிஷா ஃபாலோ செய்யவில்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். மாதவன், தனுஷ், விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு, ரன்வீர் சிங், ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பாக்னானி, துல்கர் சல்மான், ஏ.ஆர். அமீன், பிக் பாஸ் புகழ் ஆரவ், ஏ.ஆர். ரஹ்மான், அசோக் செல்வன், நிவின் பாலி, ரிஷிகேஷ், விஜய் யேசுதாஸ், விக்ரம் பிரபு ஆகியோரை இன்ஸ்டாவில் பின்தொடர்கிறார் த்ரிஷா.
கார்த்தி, ரவி மோகன்: விஜய் மட்டும் அல்ல பொன்னியின் செல்வனில் தன்னுடன் சேர்ந்து நடித்த சீயான் விக்ரம், ரவி மோகன், வந்தியத் தேவன் கார்த்தியையும் அவர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யவில்லை. என் வாழ்க்கையில் நான் யாரின் காதலையும் பிரித்து வைத்தது இல்லை சேர்த்து தான் வைத்திருக்கிறேன் என்றவர் த்ரிஷா. அப்படி அவர் சேத்து வைத்த காதல்களில் ஒன்று ரவி மோகன், ஆர்த்தியின் காதல். அப்படி இருக்கும்போது அவர் ரவி மோகனை ஃபாலோ செய்யாததும் வியக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாவில் யாரை பின்தொடர வேண்டும், பின்தொடரக் கூடாது என்பது த்ரிஷாவின் விருப்பம். அதனால் அவர் ஏன் விஜய், கார்த்தி, சீயான், ரவி மோகனை ஃபாலோ செய்யவில்லை என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
த்ரிஷா தெரிவித்த லவ்: இந்நிலையில் லவ் இல்லாம் எதற்கும் அர்த்தம் இருக்காது என்று த்ரிஷா போட்ட இன்ஸ்டா ஸ்டோரிக்கு புதுப் புது அர்த்தங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
அந்த லவ் என்பது அன்பு, பாசமாக கூட இருக்கலாம். காதலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் த்ரிஷாவோ தீவிரமான நாய் பிரியை. அதனால் அவர் குறிப்பிட்டிருக்கும் லவ், டாக் லவ்வாக கூட இருக்கலாம். ஒரு நாயின் அன்பு அவ்வளவு பெரிதா என்று கேட்டால், த்ரிஷாவுக்கு அது ரொம்ப பெரிது தான்.
மகன் இறந்தபோது எல்லாமே போச்சு, என் வாழ்க்கைக்கே அர்த்தம் போச்சுனு கண்ணீர் விட்டவர் த்ரிஷா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. மகள் இஸ்ஸி கிருஷ்ணன் தன் வாழ்க்கையில் வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டாலும் இன்னும் மகன் ஜோரோவை நினைத்து ஃபீல் பண்ணத் தான் செய்கிறார் த்ரிஷா. அதனால் அவரின் இன்ஸ்டா ஸ்டோரி இஸ்ஸி லவ்வாக இருக்கலாம்.
இஸ்ஸி கிருஷ்ணன்: ஒரு தாய் தன் மகள் நடந்தால், சிரித்தால், பேசினால் அதை அனைவரிடமும் சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவார். அதை தான் இஸ்ஸி விஷயத்தில் செய்து கொண்டிருருக்கிறார் த்ரிஷா. இஸ்ஸி செய்யும் விஷயங்களை எல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறுவதுடன் இன்ஸ்டாவில் போஸ்ட் மற்றும் ஸ்டோரியாக போட்டு ரசிர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

