Dailyhunt
விஜய்யை ஜெயிக்க வச்சது குட்டீஸ் இல்ல பாட்டீஸ் ஃபேன்ஸ்: வைரல் வீடியோ

விஜய்யை ஜெயிக்க வச்சது குட்டீஸ் இல்ல பாட்டீஸ் ஃபேன்ஸ்: வைரல் வீடியோ

Samayam Tamil 6 days ago

சினிமா கலைஞர் விஜய்: கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளில் அதுவும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு இப்படி ஆளும் கட்சியையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரே நடிகர் விஜய் என்பதே அனைவரும் வியந்து பேசும் விஷயம் ஆகும்.

விஜய்யின் நடிப்புக்கு, டான்ஸுக்கு சிறுவர், சிறுமியர் தான் அதிக அளவில் ஃபேன்ஸாக உள்ளனர் என்று கிடையாது. அவருக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிகர்கள், ரசிகைகளாக உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுமாறு உங்கப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, சித்தியிடம் அடம்பிடிக்குமாறு குட்டீஸ்களை கேட்டுக் கொண்டார் விஜய். அது சர்ச்சையானது தனிக்கதை. இந்நிலையில் இரண்டு நாட்களாக எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கிறார்கள். அது அரசியல்வாதி விஜய் பற்றி அல்ல நடிகர் விஜய் பற்றியது ஆகும்.

பாட்டீஸ் வீடியோ: விஜய்க்கும், அவரின் கட்சியினருக்கும் அதிக அளவில் ஓட்டு கிடைக்க வாண்டுகள் தான் காரணம் என்று மக்கள் பேசுகிறார்கள். ஆனால் பாட்டிமாக்கள் தான் காரணம் என ஒரு வீடியோ ஷேர் செய்யப்படுகிறது. இந்த மூதாட்டிகள் தான் விஜய்யை ஜெயிக்க வைத்தார்கள் என்று சிலரும், திமுகவை தோற்கடித்தவர்களே இந்த பாட்டிகள் தான் என்று சிலரும் தெரிவித்துள்ளனர். யாருக்கு ஓட்டு போட்டீங்க என்று சில பாட்டிகளிடம் கேட்டபோது ஒருவரோ விசில் என்று கூட சொல்லத் தெரியாமல் சிவிலு சிவிலுக்கு போட்டேன் என்றார். இன்னொரு பாட்டியோ, நான் விஜய்க்கு உசுலு சின்னத்தில் ஓட்டு போட்டேன் என கூறியிருக்கிறார். பிகிலுக்கு போட்டேன் என ஒரு பாட்டியும், விசய்க்கு ஓட்டு போட்டிருக்கிறேன் என பல் கூட இல்லாத பாட்டி விசில் அடித்துக் காட்டியதும் தான் வைரலாகியிருக்கிறது.

விஜய்னு சொல்லத் தெரியமால் விசய்னு சொன்ன மூதாட்டி வீடியோ ஏற்கனவே தனியாக வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு திடீரென்று அனைவரும் வாக்களிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர் தன் ரசிகர்கள் படையை பலமாக்கி வந்தார். அந்த படை தான் தற்போது வாக்கு வங்கியாக மாறி வெற்றி கொடுத்திருக்கிறது என்று பேசப்படுகிறது.

நல்லா நடிப்பார், நல்லா டான்ஸ் ஆடுவார், சூப்பரா சண்டை போட்டு வில்லன்களை தொம்சம் செய்வார் விஜய். அரசியலிலும் அதையே செய்வார் என நம்பி தான் ஓட்டு போட்டிருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தன் அப்பாவின் கட்சி வெற்றி பெற்ற பின் இன்ஸ்டாவில் அவரை பின்தொடர்ந்தது போதும் என அன்ஃபாலோ செய்துவிட்டார் ஜேசன் சஞ்சய் என பேச்சு கிளம்பியிருக்கிறது. ஜேசன் சஞ்சய் விஜய்யை ஃபாலோ செய்தால் தானே அன்ஃபாலோ செய்வதற்கு?
ஜனநாயகன் டைட்டில் கார்டு: விஜய்ணா ஒரு வழியாக முதல்வராகப் போகிறார். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தது போக முதல்வர் விஜய் என போஸ்டர் அடிப்பதில் பெருமையாக இருப்பதாக கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் போது அதன் டைட்டில் கார்டில் முதல்வர் விஜய் என இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஜனநாயகன் படம் பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வந்தாலும் வரலாம் என பேசப்படுகிறது. இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிம விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil