Dailyhunt
vikat sankashti Chaturthi 2026 பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி 2026 துன்பங்கள் தீர விநாயகரை இப்படி வழிபடுங்க

vikat sankashti Chaturthi 2026 பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி 2026 துன்பங்கள் தீர விநாயகரை இப்படி வழிபடுங்க

Samayam Tamil 6 days ago

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதம், சதுர்த்தி விரதம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை சதுர்த்தி திதி வருவது உண்டு.

இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி விரத தினமாக கொண்டாடுகிறோம். சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். நிகழ்த்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதத்தை போன்றே ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு ஒவ்வொரு பெயர்களும், அதற்கான தனியான பலன்களும் உள்ளது. அந்த வகையில் பங்குனி மாத தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விகட சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். விநாயகப் பெருமானின் எட்டு விதமான வடிவங்களில் ஒன்று விகட கணபதி. இந்த விகட கணபதியை இந்த நாளில் வழிபடுவதால் அனைத்து விதமான பயம், நோய்கள், துன்பங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு முக்தியை அடைய முடியும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து விதமான கடினமான சூழல்களில் இருந்தும் விடுபட முடியும்.

விகட சங்கடஹர சதுர்த்தி 2026 :

விகட சங்கடஹர சதுர்த்தி தேதிஏப்ரல் 05 ஞாயிறு
சதுர்த்தி திதி துவக்கம்ஏப்ரல் 05 காலை 11.52
சதுர்த்தி திதி நிறைவுஏப்ரல் 06 பகல் 01.48

விகட சங்கடஹர சதுர்த்தி சிறப்புகள் :

துன்பங்கள், தடைகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தரக் கூடிய விகட சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த, மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, விநாயகரை மனதார வழிபட்டால் விநாயகரின் அருள் கிடைக்கும். இந்த நாளில் விநாயகரின் மந்திரங்களையும், திருநாமங்களையும் உச்சரித்து, மோதகம் படைத்து வழிபட்டால் கர்மவிவைகள் அனைத்தும் நீங்கும். இதன் நம்முடைய துன்பங்கள் படிப்படியாக குறையும். இந்த ஆண்டு பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியான விகர சங்கடஹர சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் விநாயகரை வழிபடுவதால் ஆரோக்கிய பிரச்சனைகள், முன்னேற்றத்தில் ஏற்படக் கூடிய தடைகள் ஆகியவை நீங்கும்.

விகட சங்கடஹர சதுர்த்தியில் செய்ய வேண்டிவை:

  • அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
  • விநாயகரை வேண்டி, விரதத்தை துவக்க வேண்டும்.
  • நாள் முழுவதும் ஆழ்ந்த பக்தியுடன் விரதத்தை தொடர வேண்டும்.
  • மாலையில் மீண்டும் குளித்து விட்டு, வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். ஷோடஷ உபசாரம் பூஜை செய்து வழிபடுவது சிறப்பு.
  • விநாயகருக்கு மோதகம், அருகம்புல், வெற்றிலை பாக்கு, பழம், பாசிப்பருப்பு ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
  • மாலையில் சந்திரன் உதயம் ஆனதும், சந்திர பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபட வேண்டும்.
  • பிராமணர்கள் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
  • அனைவருக்கும் விநாயகருக்கு படைத்த பிரசாதத்தை கொடுத்து, நாமும் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil