Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே 5வது 6வது வழித்தடம் அமைக்க டெண்டர் - பெரம்பூரை 4வது முனையமாக்க திட்டம்

வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே 5வது 6வது வழித்தடம் அமைக்க டெண்டர் - பெரம்பூரை 4வது முனையமாக்க திட்டம்

Samayam Tamil 1 month ago

சென்னைக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகிறது.

கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக பெரம்பூர் ரயில் நிலையம் புதிய முனையமாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது.அதன்படி பெரம்பூர் ரயில் நிலையம் 360 கோடி ரூபாயில் மூன்றாவது முனையமாக மாற்றப்பட உள்ளது.

அதேபோல், வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே 6 கி.மீ. தூரத்திற்கு , 5-வது, 6-வது புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ள, 1,546.69 கோடி ரூபாய்க்கு தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.

வில்லிவாக்கம் முதல் அம்பத்தூர் வரை 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதை

• திட்டத்தின் மதிப்பு: ₹1,546.69 கோடி (தெற்கு ரயில்வே டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது).

• நீளம்: வில்லிவாக்கம் - அம்பத்தூர் இடையே சுமார் 6 கிலோமீட்டர் தூரம்.

• காலக்கெடு: இப்பணிகளை 2 ஆண்டுகளுக்குள் (730 நாட்கள்) முடிக்கத் திட்டமிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ரயில்களின் நெரிசலை குறைக்க ஏதுவாக புதிய முனையம்

சென்னை புறநகர் மற்றும் விரைவு ரயில்வழித்தடங்களில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காக 5ஆது மற்றும் 6ஆவது ரயில்வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. சிக்னல் கட்டமைப்பு, மின்மயமாக்கல் மற்றும் மேம்பாலப் பணிகள் இதில் அடங்கும்.

கூடுதல் ரயில்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

புதிய ரயில் பாதைஅமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல், ரயில் பாதைகள், சிக்னல் உள்ளிட்ட பாதுகாப்பான இயக்கத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும். 2028ஆம் ஆண்டிற்குள் பெரம்பூர் புதிய ரயில் முனையத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதனால் ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதோடு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பெரம்பூரில் இருந்து தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil