Dailyhunt
வில்லிவாக்கம் தொகுதி: தவெக ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு - அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!

வில்லிவாக்கம் தொகுதி: தவெக ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு - அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!

Samayam Tamil 1 week ago

மிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி மொத்த உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி நேற்றும் ஏப்.6 ஆம் தேதி நிறைவடைந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

இத்தகைய சூலில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 600 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 9ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் இன்று (07.04.2026) பரிசீலனை செய்யப்பட உள்ளன.

சென்னையில் 7ஆயிரம் வேட்பாளர்கள் தாக்கல்

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 7 ஆயிரத்து 600 பேர் வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிய உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதனால் அன்றுமாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளது. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதி ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைப்பு

இந்த நிலையில்,வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிட உள்ளார்.இதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்து இருந்தார். அவரது பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் தனது பெயரில் ரூ.180.03 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், தனது மனைவி டெய்சி அர்ஜுனாவின் பெயரில் ரூ.162.14 கோடி மதிப்பிலான நகை, அசையா சொத்துக்களையும் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில்,தற்பொது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தவெகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆதவ் அர்ஜூனா மீது பரபரப்பு புகார்

ஆதவ் அர்ஜுனா HDFC & AXIS வங்கிகளில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான டெபாசிட் வைத்திருந்தும், அதனால் கிடைக்கும் வருமான விவரங்களை மறைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்குகள் தொடங்கிய தேதி & டெபாசிட் செய்யப்பட்ட தேதி போன்ற முக்கிய தகவல்களை திட்டமிட்டு மறைத்துள்ளதாகவும், கையிருப்பு ரூ.1,69,90,582/- பணம் வைத்திருப்பதால் வேட்பாளர்களுக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியல் பதற்றத்துடன் காணப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil