Dailyhunt
World Asthma day 2026 : ஆஸ்துமா இருந்தால் என்ன சாப்பிடலாம்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்

World Asthma day 2026 : ஆஸ்துமா இருந்தால் என்ன சாப்பிடலாம்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்

Samayam Tamil 4 days ago

ன்று (மே.5) உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆஸ்துமா நோயாளிகள் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

என்ன சாப்பிடக்கூடாது போன்றவற்றை மருத்துவர் விளக்குகிறார்.


ஆஸ்துமா என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகும். உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி 2023ல் மட்டும் 363 மில்லியன் மக்கள் ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.2026-ம் ஆண்டிற்கான இந்த தினத்தில், ஆஸ்துமா நோயாளிகளின் வாழ்க்கை முறையில் உணவுமுறை எந்தளவுக்கு முக்கிய கருவியாக திகழ்கிறது என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.இன்ஹேலர் சிகிச்சைக்கு உணவு முறை மாற்றாக முடியாது

இதுகுறித்து சென்னை Gleneagles மருத்துவமனை மருத்துவர் Dr.எஸ். சுரேஷ் சகாதேவன் கூறியதாவது, "ஆஸ்துமா இன்ஹேலர் சிகிச்சைக்கு உணவு முறை மாற்றாக அமைந்துவிட முடியாது என்றாலும், சுவாசப்பாதை வீக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த நுரையீரலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முறையான உணவுமுறை, ஆஸ்துமா தீவிரமடைவதை குறைக்கவும், அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்" என்கிறார்.


ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட சிறந்த உணவுகள்
  1. ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த பழங்கள்
    பெர்ரி, ஆப்பிள், கிவி மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை சுவாசப்பாதையில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
  2. காய்கறிகள்
    பசலைக் கீரை, காலே, புரோக்கோலி மற்றும் கேரட் ஆகியவை வைட்டமின் A, E மற்றும் பீட்டா-கரோட்டின் நிறைந்தவை. இவை நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் உதவிப்புரியும்.
  3. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், வால்நட்ஸ், ஆளி விதை போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், சுவாசப்பாதையின் எரிச்சலை குறைக்க உதவும்.
  4. முழு தானியங்கள்பிரவுன் ரைஸ், ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை ஆகியவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸூடன் ஒப்பிடுகையில், இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க செய்கிறது.
  5. வைட்டமின் டி நிறைந்த உணவுகள்வைட்டமின் டி குறைப்பாடு ஆஸ்துமா கட்டுப்படுத்துவதை பாதிக்க செய்யலாம். வைட்டமின் டி குறையாமல் இருக்க செறிவூட்டப்பட்ட பால், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சூரியஒளி வெளிப்பாடு உறுதி செய்வது அவசியம்.
  6. மக்னீசியம் நிறைந்த உணவுகள்மக்னீசியம்,மூச்சுக்குழாய் தசைகளை தளர்த்த உதவுகிறது. வாழைப்பழம், நட்ஸ், விதை மற்றும் பருப்பு வகைகளில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.
  7. மசாலா பொருட்கள்மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற மசாலா பொருட்களில் இயற்கையாகவே வீக்கத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிப்புரியும்

ஆஸ்துமா இருந்தால் சாப்பிடக்கூடாத உணவுகள்
  1. பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகள்
    டிரான்ஸ் கொழுப்பு, உப்பு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் நிறைந்த இந்த உணவுகள், உடலில் அழற்சியை தூண்டி ஆஸ்துமா கட்டுப்பாட்டை மோசமாக்கும்.
  2. சல்பைட் உள்ள உணவுகள்உலர்ந்த பழங்கள், ஒயின், ஊறுகாய் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் காணப்படும் சல்பைட் உள்ளடக்கம், சிலருக்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்படுத்தலாம்.
  3. அதிகப்படியான உப்பு உணவுகள்
    அதிக சோடியம் எடுத்துக்கொள்வது சுவாசப்பாதையின் உணர்திறனை அதிகரித்து, அறிகுறிகளை தீவிரமாக்கலாம்.
  4. உணவு ஒவ்வாமைநட்ஸ், கடல் உணவுகள், முட்டை மற்றும் பால் ஆகியவை சிலருக்கு அலர்ஜியை தூண்டலாம். அலர்ஜியால் ஏற்படும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், தங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும்.
  5. சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ்
    இவை உடல் பருமன் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு காரணமாகின்றன. இந்த இரண்டுமே ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்துவதை கடினமாக்கி, நோயின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.
  6. குளிர்ந்த உணவு - பானங்கள்
    சில ஆஸ்துமா நோயாளிகள் குளிர்ந்த பானங்கள் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடும்போது அறிகுறிகள் மோசமாவதாக கூறுகிறார்கள். இருப்பினும், இது நபருக்கு நபர் மாறுபடலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் பின்பற்ற வேண்டிய கூடுதல் குறிப்புகள்
  • உடல் எடையை குறைப்பது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவும்.
  • போதிய அளவு திரவ நுகர்வு சுவாசப்பாதையில் உள்ள சளியை எளிதாக வெளியேற்ற உதவும்.
  • பால் குடிப்பதால் மட்டுமே அனைவருக்கும் ஆஸ்துமா அதிகமாகிவிடாது. இருப்பினும், சிலருக்கு பால் சாப்பிட்ட பிறகு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்து அதற்கு ஏற்றப்படி முடிவெடுப்பது நல்லது.
  • அனைத்து நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான எதிர்வினை இருக்க செய்யாது. எனவே ஒவ்வொருவரும் எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதை கண்டறிந்து தனிப்பட்ட உணவு முறையை திட்டமிட வேண்டும்

முறையான இன்ஹேலர் சிகிச்சையோடு, சமச்சீரான உணவுமுறையையும் பின்பற்றுவது ஆஸ்துமாவை வெல்ல சிறந்த வழியாகும். இந்த உலக ஆஸ்துமா தினத்தில், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செய்யுங்கள்.

மருத்துவ நிபுணர் ஆலோசனை

இந்த கட்டுரை சென்னை கிளெனேகிள்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ ஆலோசகர் Dr.எஸ். சுரேஷ் சகாதேவன் (Pulmonology, Interventional Pulmonology and Sleep Medicine), சமயம் தமிழுக்கு அளித்த மருத்துவ விளக்கங்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil