Dailyhunt
'யார் இந்த அசோக் சர்மா?'.. 154.2 வேகத்தில் பந்துவீசி அசத்தியவரின் வரலாறு: அவரது பலம் என்ன?

'யார் இந்த அசோக் சர்மா?'.. 154.2 வேகத்தில் பந்துவீசி அசத்தியவரின் வரலாறு: அவரது பலம் என்ன?

Samayam Tamil 1 week ago

23 வயதாகும் குஜராத் டைடன்ஸ் அணி பௌலர் அசோக் சர்மா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, 154.2 வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.

இவர், 16ஆவது ஓவரை வீசியபோது, அந்த ஓவரின் கடைசி பந்தில் 154.2 வேகத்தில் பந்துவீசி, ஐபிஎல் 2026 சீசனின் அதிவேக பந்துவீச்சை பதிவு செய்தார். இதே ஓவரில், 4ஆவது பந்தில் 150.7 வேகத்திலும் பந்துவீசியிருந்தார்.

தரமான பந்துவீச்சு: அசோக் சர்மா, தொடர்ச்சியாக 145+ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன், லெந்தில் சிறப்பாக பந்துவீசுகிறார். மேலும், அவரால் ஸ்விங்கும் செய்ய முடிகிறது. இதற்குமுன், உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 145+ வேகத்தில் பந்துவீசியிருந்தார். இருப்பினும், அவரால் தொடர்ச்சியாக சரியான லைன், லெந்தில் பந்துவீச முடியவில்லை. தற்போது, அசோக் சர்மா அதிவேகத்தில் ஸ்விங் செய்கிறார். மேலும், சரியான லைன், லெந்திலும் பந்துவீச முடிகிறது

அசோக் சர்மா குறித்து, ஐபிஎல் டி20.காம் இணையதளத்தில் சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ''அசோக் சர்மாவால் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடியும். மேலும், அதிவேகத்தில் சரியான லைன், லெந்திலும் பந்துவீச முடியும். அவர், துவக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் இருந்தார். நெட் பௌலராக இவரை பயன்படுத்தினார்கள். அப்போது, இவரது அதிவேக பந்துவீச்சை பார்த்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பலரும் அசோக் சர்மாவை பாராட்டினார்கள்''

''பிறகு கேகேஆர் அணியின், பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு அபாரமாக பந்துவீசியதால், 2022ஆம் ஆண்டு ஏலத்தில், 55 லட்சம் மதிப்பில் அசோக் சர்மாவை கேகேஆர் அணி வாங்கியது. பிறகு, ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சென்றார். ஆனால், களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு, ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலத்தில், 90 லட்சம் மதிப்பில், அகமதாபாத் அணிக்கு சென்றார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் சர்மா, மொத்தம் 11 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்களை எடுத்துள்ளார். அதாவது, சராசரியாக ஒரு போட்டியில் 3 விக்கெட்களை எடுக்க முடியும் என்பது தெரிய வருகிறது. 4 முதல்தர போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களையும், 7 லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்களில் 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். ஷிம்ரோன் ஹெட்மையர் விக்கெட்தான், அசோக் சர்மாவுக்கு முதல் ஐபிஎல் விக்கெட் ஆகும்.

ஸ்கோர் விபரம்: இப்போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 210/6 ரன்களை குவித்தது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 36 பந்தில் 55 ரன்களையும், துரூவ் ஜோரல் 42 பந்துகளில் 75 ரன்களையும் எடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 18 பந்தில் 31 ரன்களையும், ஷிம்ரோன் ஹெட்மையர் 8 பந்தில் 18 ரன்களையும் எடுத்தனர்.

குஜராத் டைடன்ஸ் தோல்வி: இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி 20 ஓவர்களில் 204/8 ரன்களை மட்டும் எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். ஜாஸ் பட்லர் 26 (14), கேப்டன் ரஷித் கான் 24 (16), ரபாடா 23 (16) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருந்தார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலர் ரவி பிஷ்னோய், இம்பாக்ட் வீரராக வந்து 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil