Sunday, 18 Oct, 5.27 am சர்வம் News

அரசியல்
எடப்படியாரை முதல்வராக்குங்கள்! சிறப்பாய் பிரச்சாரத்தை துவக்கிய சி.வி. சண்முகம்!!

இப்போது அ.தி.மு.க.வில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில்தான் போட்டி. 'ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வை அதிகம் தோலுரித்துக் காட்டுவது நீங்களா அல்லது நானா?' என்று. அந்த இருவரும் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரான உதயகுமார் இருவரும்தான்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது இருவருக்கும் இடையில் உள்ள போட்டி செம்ம சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இருவருமே தி.மு.க. மற்றும் ஸ்டாலினின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு தோல் உரித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீட், கெயில், மீத்தேன், விவசாயிகள் பிரச்னை என அத்தனையிலும் ஸ்டாலினின் ரெட்டை வேஷத்தை இந்த இரு அமைச்சர்களும் நொடிக்கு நொடி புதுப்புது ஆதாரங்களுடன் வெளியிட்டு, ஸ்டாலினின் கர்வத்துக்கு சேதாரத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைமையின் குடும்ப அரசியல் பற்றி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசுகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் இணைய வரும் பல்லாயிரம் இளம் உள்ளங்களிடம் தி.மு.க.வின் சுயநல மற்றும் குடும்ப அரசியல் பற்றி அவர் தெளிவாக விளக்குவதால், வெகுஜன விரோத கட்சியான தி.மு.க. பற்றி இளைஞர்கள் மிக தெளிவாகப் புரிந்து கொள்கின்றனர்.

சமீபத்தில் விக்கிரவாண்டியில் இப்படியொரு நிகழ்வில் பேசியவர் 'தி.மு.க. ஒரு குடும்ப கட்சி, வாரிசு இயக்கம். தி.மு.க.வினர் கவர்ச்சியான திட்டங்களைக் கூறி மக்களை திசை திருப்புகிறார்கள். அவர்களுக்கு கை வந்த கலை அது. தி.மு.க. கும்பலின் முக்கிய நோக்கமே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு ஆகியவைதான்.

ஆனால் கழகத்தின் அரசோ மக்களுக்கான அரசு. உழைப்பவர்களுக்கு பதவி தரும் ஒரே இயக்கம் இதுதான். பாசறை நிர்வாகிகளால்தான் அடுத்த தலைமுறைக்கு கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். உங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம். அம்மா காட்டும் வழியில் நம் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் ஆட்சி செய்து கொண்டும், கட்சியை வழிநடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளனர். இதை விட பெரிய சாதனை வேறென்ன இருந்துவிட முடியும்? நோயற்ற சமுதாயம்தான் சிறந்த மாநிலத்தின் அடிப்படை. அப்படியொரு சிறப்பான தமிழகம் அமைந்திடத்தான் கழக அரசு கடுமையாக உழைக்கிறது. இந்த 11 மருத்துவ கல்லூரிகளிலும் இயங்க இருக்கும் மருத்துவமனைகளால் ஏழை எளியோரின் நோய்கள் நீங்கும். இந்த மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளால் ஆரோக்கியமான தமிழகம் உருவாகும் எதிர்காலத்தில்.

இந்த சூழல் இன்னும் சிறப்பாய் மேம்பட்டுவிட, அண்ணன் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குங்கள்.' என்று ஷார்ப்பாய் பிரசாரத்தை துவக்கியுள்ளார் இளைஞர்கள் மத்தியில்.

தெறி!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top