Saturday, 19 Sep, 1.21 pm சர்வம் News

அரசியல்
கலர் கலரா நாடகம் போடும் அமைச்சர் நீங்கதானே!: வருவாய்த்துறை அமைச்சரை வாரியெடுத்த ஸ்டாலின் டீம்.

அது ஒரு தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது! அதாவது தி.மு.க.வை ஆளும் அ.தி.மு.க. திட்டுவதும், அதற்கு பதிலடியாக தி.மு.க.வினர் ஆளும் கட்சியை தாறுமாறாக திருப்பித் திட்டுவதுமான ப்ராசஸ்தான்.

அந்த வகையில் லேட்டஸ்டாக ஸ்டாலினை திட்டிவிட்டு, அதற்கு வகையாக வாங்கிக் கட்டியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.

அதாவது அமைச்சர்…
கேட்டால்தான் வரம் தருவார் கடவுள். ஆனால், இன்று கேட்காமலேயே தமிழக மாணவர்களின் காப்பாற்றிய தெய்வங்களாக தமிழக முதல்வர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போய் கேவலம் அற்ப அரசியல் மூலம் தூற்ற முயன்று தோற்கிறார் ஸ்டாலின்.

அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறார் ஸ்டாலின். அதனால்தான் நேரத்துக்கு நேரம் மாறும் பச்சோந்தி போல் தன் முடிவுகளையும், கொள்கைகளையும், போக்கையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

நீட் தேர்வை பொறுத்தவரையில் இன்று உத்தமர் வேஷம் போடும் ஸ்டாலின், அன்றே தங்களின் கூட்டணி அரசில் காங்கிரஸிடம் பேசி நிறுத்தியிருக்க வேண்டிதானே? காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்த்து ராஜினாமா செய்திருந்தால் இன்று இந்த இக்கட்டு ஏற்பட்டிருக்காதே.

எட்டு மாதத்தில் ஆட்சிக்கு வந்துவிடுவோம்! எனும் மமதையில் இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், எட்டு மாதத்தில் தி.மு.க.வின் கொட்டத்தை ஒரேடியாய் அடக்கும் தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். ஆட்சியை கலைக்க முடியாமல், தன் சட்டையை கிழித்த எதிர்க்கட்சித் தலைவரென்றால் அது இந்த உலகத்திலேயே ஸ்டாலின் மட்டும்தான்.

இதுவரையில் சுமார் ஒரு லட்சம் தடவையாவது அ.தி.மு.க. அரசை கவிழ்ப்பேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நடக்கவும் செய்யாது. மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் நிற்கிறார்கள். அவர்களின் ஆசி இருப்பதால் அம்மாவின் ஆட்சிதான் இனி எந்நாளும் தமிழகத்தில்.

ஸ்டாலினுக்கு உருவாகியுள்ளது வயிற்றுப் பசி அல்ல. அதிகாரப்பசி. அதனால்தான் பல நூறு கோடிகளை கொட்டிக் கொடுத்து ஐபேக் மூலம் தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ள துடிக்கிறார். ஆனால், மக்கள் விரும்புவதோ ஒரு எளிமையான முதல்வரை. தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, நில அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகம் என மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது.

ஆனால் இப்போது நடப்பதோ மக்களின் ஆட்சி! என திட்டினார்.

இதற்குப் பதிலுக்கு அவரை திட்டியிருக்கும் தி.மு.க.வின் இணையதள அணி அடேங்கப்பா இந்த விமர்சனத்தை வைப்பது யார? இந்திய அரசியலிலேயே பச்சோந்தித்தனத்துக்கு ஒரே உதாரணம்னா அது நீங்கதான். ஜெயலலிதா இருக்குறப்ப ஒரு நாடகம், டாக்டர் வெங்கடேஷிடம் ஒரு நாடகம், ஜெ., மறைவுக்குப் பிறகு சசிகலாவிடம் ஒரு நாடகம், அந்தம்மா உள்ளே போனதும் இ.பி.எஸ்.ட்ட ஒரு நாடகம், ஓ.பி.எஸ்.ஸை ஒதுக்கி வெச்சு ஒரு நாடகம், உள்ளே சேர்த்த பிறகு ஒரு நாடகம்னு கலர் கலரா நாடகம் நடத்தி அரசியல்ல பிழைக்கும் நீங்க எங்களை திட்டுறதா? என கேட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top