Friday, 16 Oct, 3.48 am சர்வம் News

அரசியல்
கருணாநிதியின் கைப்பிள்ளை ஸ்டாலினுக்கு அரசியலில் இனி வேலை இல்லை: அந்தர் பண்ணும் அ.தி.மு.க!!

வதந்தியார் ஸ்டாலினை தமிழக அரசியல் அரங்கில் எங்கே பார்த்தாலும் விரட்டி விரட்டி வெளுக்கிறது அ.தி.மு.க. இதற்கு 'முன்னாடியெல்லாம் அடிச்சா ஒரு காரணத்தை சொல்வாங்க. ஆனா இப்பல்லாம் ஏன்? எதுக்குன்னு காரணமே சொல்லாம அடிக்கிறாங்க!' என்று அழுது புலம்புகிறார் ஸ்டாலின். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட' என்று சொல்லி திரும்பத் திரும்ப விமர்சனங்களால் தாக்குகின்றனர் அ.தி.மு.க.வினர். ஸ்டாலினுக்கும் அதுதான் புரியவில்லை. எதற்கு தான் சரிப்பட்டு வரமாட்டோம் என்று!

அது….'அரசியலுக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்.' என்பதுதான். ஆனால் இதை அவரிடம் எடுத்துச் சொல்லி, வீட்டிலேயே உட்கார வைக்க தி.மு.க. நிர்வாகிகளுக்கு வக்கனை இல்லை என்பதுதான் கேடே.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் இப்படி பொளந்து கட்டியிருக்கிறார் ஸ்டாலினை….'புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத இயக்கத்தை எளிதாய் வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடித்தார் ஸ்டாலின். ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை வழி நடத்திட சரியான தலைவர் இல்லை என்றும் கனவு கண்டு, அதை வளக்கவும் பார்த்தார். இழவு வீட்டில் இருந்து இருட்டு நேரத்தில் ஆட்சியை சுருட்டிக் கொண்டு போய்விடலாம் என இலவு காத்த கிளியாக நேரம் பார்த்துக் காத்திருந்தார். கருணாநிதியின் கைப்பிள்ளையான மு.க. ஸ்டாலினுக்கு அவ்வளவு பதவி வெறி. அதனால்தான் முட்டி மோதினார். ஆனால் கடைசியில் மூக்கு உடைந்ததுதான் மிச்சம்.

இன்னும் நூறாண்டு காலங்கள் அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும்! என்று புரட்சித் தலைவி சொன்ன சத்திய வார்த்தைகளை வேதவாக்காக கொண்டு பணியாற்றும் கழக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அரவணைத்துச் சென்று ஆட்சியையும் கட்சியையும் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வைக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும். எதிரிகளின் சூழ்ச்சிகள், துரோகிகளின் வஞ்சனைகள் இரண்டிலும் இருந்து கழகத்தை மிக அழகாய் காப்பாற்றுகின்றனர்.

2021 சட்டசபை தேர்தலில், யார் முதல்வர் வேட்பாளர்? எனும் விவாதத்தை உருவாக்கிய எதிரிகள், கழகத்தினுள் குழப்பத்தையும் உருவாக்கிட காத்திருந்தனர். பொது மக்கள் மத்தியில் கழகத்தின் மீது ஒரு அவநம்பிக்கையை உருவாக்கி, கட்சியை பிளவு படுத்திடவும் முனைந்தார்கள். ஆனால் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.

புரட்சித் தலைவர் உழைத்துச் சம்பாதித்த, புரட்சித் தலைவி அவர்கள் உயிரை கொடுத்து உயர்த்திய கழகத்தை நம் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் அணையா விளக்காக அரசியலரங்கில் ஏற்றி வைத்து, தமிழகத்துக்கு ஒளி கொடுக்கின்றனர். இந்த வெளிச்சத்தை அணைத்து, இருளாக்கிட அதை நோக்கி வரும் ஈசல் பூச்சிகள் நெருப்பில் சாம்பலாவது உறுதி.

2021 மட்டுமில்லை இனி எக்காலமும் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி காலம்தான்.' என்று பொளேர் வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.

போட்டுத்தாக்கு!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top