Sunday, 20 Sep, 1.18 pm சர்வம் News

அரசியல்
ரெய்டுக்கு நாங்க ரெடி! தில்லு இருந்தால் மோடியை எதிர்த்துப் பேசுங்க பார்ப்போம்: அ.தி.மு.க.வுக்கு ஏழரையை இழுக்கும் தி.மு.க.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. வைக்கும் மிகப்பெரிய விமர்சனமே மோடியின் அடிமை அரசாங்கம் என்பதுதான். இதை எத்தனை முறை எடப்பாடியார் தரப்பு மறுத்தாலும், மாற்றிக் கொள்வதில்லை ஸ்டாலின் டீம். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் தலைவன் யார்? என்பதில் துவங்கி பல விஷயங்களில் பா.ஜ.க.வை எதிர்த்து அ.தி.மு.க. பேசிய பிறகும் கூட இந்த விமர்சனத்தை தொடர்கிறது ஸ்டாலின் தரப்பு.

இந்நிலையில் தி.மு.க.வின் மாநில நிர்வாகியான மாஜி அமைச்சர் கே.என்.நேரு பேசிய வார்த்தை ஒரு போரினை உருவாக்கியுள்ளது.

அதாவது பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்வதால் அதன் கைகளில் முழு இந்தியாவும் உள்ளது. மக்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்துப் பேசினாலும், வருமான வரித்துறையினரால் மிரட்டப்படுகின்றனர் என்று சொல்லியிருக்கிறார்.

இதைத்தான் அப்படியே அல்வா போல் கையில் எடுத்து வைத்துப் பேசியிருக்கும் அரசியல் விமர்சகர்கள் ஆக, பூனைக்குட்டி வெளியே வந்த கதையாகப் பேசியிருக்கிறார் நேரு! வருமான வரித்துறையை பார்த்து இவர்கள் ஏன் பயப்படணும்? மடியிலே கனமில்லைன்னா வழியில் ஏன் பயம்?

அப்படின்னா இத்தனை தடவையும் ஆட்சியில் இருந்த காலத்தில் மக்கள் வரிப்பணத்தில் வகையா மஞ்சள் குளித்து கோடி கோடி கோடியா சேர்த்து வெச்சிருக்கிறதை ஓப்பனா ஒப்புக் கொள்றார் நேரு! அப்படித்தானே. அவர் மட்டுமில்லை, அவரைப்போலவே தி.மு.க.வின் தலைமைப் புள்ளியில் இருந்து அத்தனை பேருமே இப்படித்தான் வருமானத்துக்கு அதிகமா தாறுமாறாக சேர்த்து வெச்சிருக்கிறாங்க.

அதனாலதான் ரெய்டு நடந்தால், அத்தனையும் ஜப்தியாகிடுமேன்னு நடுங்குறாங்க. மத்திய அரசு உண்மையிலேயே மக்கள் நலனுக்கு எதிராக ஏதாவது செய்தாலும் கூட இவங்க வழுவா வாய் திறக்கமாட்டாங்க. காரணம், ரெய்டு பயம்! என திட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்திருக்கும் தி.மு.க.வோ நாங்க யாரையும் ஏமாத்தி பணம் சேர்க்கலை. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததற்காக கோடிக்கணக்கில் ஃபைனும், நாலு வருஷம் சிறைத்தண்டனையும் வாங்கியது யாருன்னு உலகத்துக்கு தெரியும்.

அதனால இப்ப உங்களுக்கு தில்லு இருந்தால் மோடியின் விவசாய கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றில் அவங்களை உலுக்கி எடுத்து ஒரு விமர்சனத்தை வையுங்கள் பார்ப்போம். என்று உசுப்பியுள்ளனர்.

என்னாகுதுன்னு பார்ப்போம்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top