Thursday, 15 Oct, 9.56 am சர்வம் News

அரசியல்
சமூக நீதி! சமூக நீதி!ன்னு நீங்க ஸீன் போடுற லட்சணம் இதுதான்: தி.மு.க.வை திட்டித் தீர்க்கும் மீடியா.

தன்னோட முதுகு முழுக்க அழுக்கை வெச்சுக்கிட்டு, அடுத்தவன் கண்ணுல இருக்கிற சின்ன தூசியைப் பற்றி கேவலமாக பேசி, அதைவெச்சு மிகப்பெரிய டிராமா நடத்துறதுல தி.மு.க.வை மிஞ்சிட இந்த தேசத்துல வேற கட்சியே கிடையாது. அப்படித்தான் சமீபத்திய 'தீண்டாமை' விஷயத்திலும் அவர்கள் ஸீன் செய்ய, விட்டு விளாசியிருக்கிறது மீடியா.

தி.மு.க.வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் வரும் திட்டை ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ஒரு பெண். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரை, தலைவர் நாற்காலியில் அமர விடாமல் தரையில் அமர வைத்து மற்ற உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்தபடி கூட்டம் நடத்திய விவகாரம் தேசத்தையே அதிர வைத்துள்ளது.

இந்த நிலையில், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு இது குறித்து வாய் திறந்திருக்கிறார். தன் கட்சியின் சக மனிதர்களை ஏகபோக வசனத்துடன் பேசுவதும், திட்டுவதும் இந்த நேருவின் அகம்பாவ அடையாளம். அப்பேர்ப்பட்டவர் மிகப்பெரிய நன்னூல் போல….

'தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். நான்கு ஊராட்சிகளில் தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் அப்போதைய முதல்வர் கருணாநிதி அத்தேர்தலை நடத்தி, தலித் தலைவர்களை உருவாக்கினார்.' என்று பெருமையாக பேசியுள்ளார்.

இதற்குப் பதிலடி தந்திருக்கும் மீடியா 'அடேங்கப்பா எவ்வளவு பெரிய சாதனையை உங்க அரசாங்கம் பண்ணிட்டதா பெருமைப்பட்டுக்குறீங்க!

இதுவரைக்கும் ஐந்து முறை உங்க தலைவர் முதலமைச்சரா இருந்திருக்கிறார். எதுக்கெடுத்தாலும் 'சமூக நீதி! சமூக நீதி!'ன்னு ஸீன் போடுறீங்க. ஆட்சியில் இருந்து அள்ளி முடிஞ்ச காலத்துல சமூக நீதியை எங்கே உருவாக்கி இருக்கீங்க நீங்க! அப்படி உருவாக்கியிருந்தால் இந்த நிலைமையெல்லாம் தமிழ்நாட்டுல தொடர்ந்துட்டு இருக்குமா?

வெறுமனே ஜாதியை வைத்து அரசியல் பண்ணியிருக்கீங்க அவ்ளோதான். அதுக்கு இந்த சம்பவமே சாட்சி. ஜாதியை அரசியலுக்காக கொண்டாடுற உங்களைப் போன்ற கட்சிகள் திருந்தாத வரையில் இந்த மாதிரியான பிரச்னைகளை தடுக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது.

முதல்ல திருந்த வேண்டியது நீங்கள் எல்லாரும்தான்!' என்று வெளுத்துள்ளது.

தர்ம அடி!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top