Thursday, 15 Oct, 5.54 am சர்வம் News

அரசியல்
ஸ்டாலின் தோழர் அழகிரி பேசுவது நாகரிகமற்ற நாலாந்தரத்தின் உச்சம்: நறுக்குன்னு குட்டிய நமது அம்மா!!

காரியம் ஆகும் வரையில் காலை பிடிப்பது, காலம் கடந்த பின் கழுத்தை நெரிப்பது! இதுதான் தி.மு.க.வின் அரசியல் தர்மம். தங்கள் கட்சியிலோ, கூட்டணியிலோ இருப்போரை பற்றி வெளியே பெருமையாக பேசுவார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின் அவர்களை மிக அசிங்கமாக வர்ணிப்பது தி.மு.க.வின் வழக்கம்.

நெடுங்காலமாக அவர்களின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்த சிறு புத்தி ஒட்டிக்கொள்ளத்தானே செய்யும். அந்த வகையில், தங்கள் கட்சியை விட்டு வெளியேறிய குஷ்புவை தமிழக காங்கிரஸ் தலைவர் மிக மோசமாக வர்ணித்துள்ளார். இதற்கு 'குஷ்பு எதிர்க்கட்சியோ, நட்புக் கட்சியோ. ஆனால் சக மனுஷியை அசிங்கப்படுத்தும் செயலை பொறுக்க மாட்டோம்!' என சொல்லி தமிழகத்தின் ஆளுங்கட்சியின் அதிகார நாளிதழான நமது அம்மா ஒரு கண்டன கட்டுரையை வடித்துள்ளது. அதில்…

'குஷ்பு இங்கு இருக்கும் வரை காங்கிரஸின் கொள்கைகளை புரிந்து கொள்ளாத ஒரு நடிகையாகத்தான் இருந்தார்.- என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மிக மோசகமாக வர்ணித்துள்ளார். ஓகோ, அப்படியென்றால் நடிகையாகவே மட்டும் பார்க்கப்பட்ட அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பை எதுக்காக வழங்குனீர்களாம்? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது பதிமூன்று தொண்டர்கள், பதினைந்து கோஷ்டிகள் கொண்ட ஆச்சரிய இயக்கம்.

கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு தி.மு.க. போன்ற கொள்ளை கூட்டத்தோடு கூட்டு வைத்துக்கொண்டு அலைக்கற்றைகளை எப்படி விற்கலாம், ஆயிரமாயிரம் கோடிகளை எப்படி சுருட்டலாம் என்பதில் மட்டுமே நாட்டம் கொண்ட இயக்கமாக காங்கிரஸ் மாறிப்போய்விட்டது.

மேலும் குஷ்புவை வைத்து மக்களை ஈக்கலாம் என்று கணக்கு போட்டு ஊடகங்களை கையாளும் உயரிய பொறுப்பை காங்கிரஸ் கட்சி அவருக்க்கு கொடுத்துவிட்டு இப்போது அவர் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், அவர் இங்கே நடிகையாக மட்டும்தான் இருந்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பேசுவதெல்லாம் வெளியே போனவர் மீது வைக்கின்றன் வைத்தெரிச்சல் விமர்சனமே.

ஏற்கனவே கேவலம் நடிகைகள் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் இப்போது அவரது கூட்டணி கட்சித் தலைவரான அழகிரியும் அதே பாணியில் பேசியிருப்பது கூடாத நட்பால் விளைந்த கேடான காரியமே.

தீபா, மாயா, நக்மா என்று ஏராளமானவர்களுக்கு இடம் கொடுத்த காங்கிரஸ் இப்போது கட்சியை விட்டு விலகியவரை நடிகையாக இருந்தார் என்று இளக்காரம் பேசுவது நாகரிகமற்ற நாலாந்தரத்தின் உச்சம்.' என சீறியிருக்கிறது.

செம்ம அடி!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top