Friday, 16 Oct, 4.11 am சர்வம் News

அரசியல்
ஸ்டாலினுக்கு ஓட்டுப் போடுவது அரளி விதையை அரைத்து வாயில் போடுவதற்கு சமம்!: தெறிக்கவிடும் ஆளுங்கட்சி!!

'அரசியல் குழுவும், அக்கிரம யோசனைகளும்…' எனும் தலைப்பில் தி.மு.க.வை விட்டு திருப்புத் திருப்புன்னு திருப்பியிருக்கிறது ஆளுங்கட்சி. தனது அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில்தான் இந்த அதிரடி தடாலடியை நிகழ்த்தியுள்ளது அக்கட்சி.

உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக அந்த ஹட் கட்டுரை இதோ….'தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை செய்ததாமே! என்ன ஆலோசனை? ஏழை, எளிய மக்களிடம் அடகு வைத்த நகை சீட்டுக்களை எல்லாம் தயாராக எடுத்து வெச்சுக்கோங்க. தேர்தல் முடிந்த கையோட திருப்பி தருவோமுன்னு ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் உழைத்து பிழைக்கிற ஏழை, எளிய மக்களிடம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏய்த்துப் பிழைத்தார்களே! அது போல வரும் சட்டமன்ற தேர்தலிலும் மோசடியான வாக்குறுதிகளை முன்வைப்பதற்கு திட்டமிடுகிறார்களோ!

இல்லை, கருணாநிதி போல ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக தருகிறோம் என்று அல்வா கொடுக்கலாமா? விவசாயிகளுக்கெல்லாம் விலையில்லாமல் மின் மோட்டார்கள் தருகிறோம் என்று அள்ளிவிடலாமா? இல்லை, அரசு கேபிள் அமைக்கிறோம் என்று சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் அது அடக்கமாக செயல்படுகிறது என்று மக்களை ஏளனம் செய்தார்களே, அதுபோல இன்னும் இன்னுமாக ஏய்த்துப் பிழைப்பதற்கு ஆட்களை கூட்டி வைத்து ஆலோசனை செய்திருப்பார்களோ?

இல்லை ஒருவேளை கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை போட்டு, கட்சித் தொண்டர்கள் என்ற பெயரிலே குண்டர்களை ஏற்பாடு செய்து அதிகாலை எட்டு மணிக்கே வாக்குச்சாவடிகளில் உள்ளே தாழ்பாள் போட்டுக் கொண்டு தங்களுக்கு தாங்களே அவர்களின் நமக்கு நாமே திட்டம் போல வாக்குகளை குத்தி போட்டுக் கொண்டு கடைசியில் மொத்த தேர்தலும் ரத்து என்று உயர்நீதிமன்றத்திலும் உச்சந்தலையில் குட்டு வாங்கினார்களே அதே போல ஏதாவது கோல்மால்கள் செய்வதற்கு குறிப்பெடுக்கிறார்களா?

எப்படி ஆனாலும் சரி, இனியும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது அரளி விதையை அரைத்து தின்பதற்கு சமம் என்பது மக்களுக்கு தெளிவாகவே தெரியு. எனவே இனியும் ஆலோசனைகளை நடத்தி குரளி வித்தை செய்து கோட்டையை பிடிக்கலாம் என்று கனா காணுவது ஒரு நாளும் பலிக்காது.' என்று தெறிக்க விட்டிருக்கிறது.

செம்ம குத்து!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top