Thursday, 15 Oct, 5.45 am சர்வம் News

அரசியல்
செல்வாக்கான தலைவர் இ.பி.எஸ்! செட்-அப் தலைவர் ஸ்டாலின்: சம்மட்டி அடி அடித்த எம்.எல்.ஏ!!

அ.தி.மு.க.வினரின் தன்னம்பிக்கை தரும் தைரியத்தைப் பாருங்கள்!…. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மே மாதம் வர இருக்கிறது, அதை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரசாரத்தை துவக்கினார்கள். ஆனால் களத்தில் மக்கள் ஆளுங்கட்சிக்கு முழு ஆதரவாக இருப்பதை பார்த்ததாலும், உளவுத்துறையின் ரிப்போர்ட் அவர்களுக்கே ஆதரவாக இருப்பதாலும் ஆளுங்கட்சியினருக்கு பெரும் நம்பிக்கை பிறந்துவிட்டது. ஜெயலலிதாவின் ஆசி பெற்ற கட்சி ஹாட்ரிக் அடிக்கப்போவது உறுதி! என்று திடமாக நம்புகிறார்கள். இந்த தைரியத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பாவின் பேச்சில் அறியலாம்.

அவர் 'நாங்கள் தேர்தலை சந்திக்க இப்பவே தயாராக உள்ளோம். ஏனென்றால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு இல்லை. நூற்றுக்கு நூறு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் இந்த தமிழகம் எப்படி இருந்தது? என்று மக்களுக்கு தெரியும். நாங்கள் பத்தாண்டு சாதனைகளை கூறி வாக்குகள் கேட்போம். ஆனால் தி.மு.க.வினர் எதைச்சொல்லி வாக்கு கேட்பார்கள்?

விவசாயிகளின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்கிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருக்கிறார். ஆனால் திடீரென்று ஸ்டாலின் விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க துவங்கிவிட்டார். ஆனால் அது போட்டோ ஷூட் நாடகம் என்பது மக்களுக்கு தெரியும்.

முல்லைப் பெரியாறு, காவேரி போன்றவற்றில் தமிழகத்தின் உரிமைகளை தங்களின் சுயநலனுக்காக விட்டுக்கொடுத்த கூட்டம்தான் தி.மு.க. விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் வாழ்க்கையை முடக்கியதுதான் தி.மு.க. செய்த சாதனை. இதனை விவசாயிகள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள். ஆனால் அதே முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரங்களில் சட்டப்போராட்டத்தை நடத்தி உரிமையை மீட்டவர் புரட்சித்தலைவி அவர்கள்.

அம்மா மீட்டுத் தந்த உரிமைகள் மீண்டும் பறிபோகாமல் காத்தோடு, மேலும் பல உரிமைகளை தமிழக விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தவர்தான் எடப்பாடியார். எளிய விவசாயியான அவர், வயல்வெளிகளில் இறங்கி பீடு நடை போட்டார். வரலாறு அவரை மகிழ்வாக படமெடுத்துக் கொண்டது. ஆனால் புலியைப் பார்த்து சூடு போட்ட பூனையாக ஸ்டாலினும் எடப்பாடியாரைப் போல் வயலில் இறங்கினார். அவரது செட்டப் கேமெராக்கள்தான் அவரை போட்டோ எடுத்தனர்.

இதுதான் செல்வாக்கான தலைவருக்கும், செட்டப் தலைவருக்குமான வேற்றுமை.' என ஓங்கி ஒரே போடாக போட்டுள்ளார்.

யம்மாடியோவ்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top