Sunday, 18 Oct, 5.46 am சர்வம் News

அரசியல்
தமிழனின் உரிமையை அடகு வைத்த கட்சிதான் தி.மு.க: குத்திக் கிழிக்கும் குத்தீட்டி.

தேர்தல் நெருங்க நெருங்க, தி.மு.க. மீதான அ.தி.மு.க.வின் விமர்சன அழுத்தங்கள் நாளுக்கு நாள் பல டன்களாக அதிகரிக்கின்றன. அந்த வகையில், ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் குத்தீட்டி! பகுதியானது, தி.மு.க.வுக்கு எதிராக வைத்திருக்கும் லேட்டஸ்ட் வெடி இதோ…

'போதிக்கும் அருகதை இல்லை….பொல்லாங்கு தி.மு.க.வுக்கு அறவே இல்லை! கூட்டணிக்காக இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று போதிக்கிறாரே ஸ்டாலின். அவருக்கு சில வார்த்தைகள்….

தங்களது சுயலாபத்துக்காக, தங்கள் குடும்ப வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக தமிழகத்தின் ஏராளமான ஜீவாதார உரிமைகளையும், உடைமைகளையும் தாரை வார்த்த கும்பல் உங்கள் கோல்மால்புரத்து கும்பல்தான். சர்க்காரியா வழக்கிற்கு பயந்து காவேரி உரிமையை கன்னடருக்கும், கச்சத்தீவு உரிமையை சிங்களருக்கும், முல்லைப் பெரியாற்று உரிமையை கேரளருக்கும், முள்ளி வாய்க்காலை மட்டுமே தமிழருக்குமாக இட ஒதுக்கீடு செய்த துரோக கட்சிதான் தி.மு.க.

அதுமட்டுமல்ல, தமிழர் தம் பண்பாட்டு பெருமையான ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்தது, நீட் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு முன்மொழிந்த அம்சங்களை சீர்தூக்கி பார்க்காமலேயே ஆமோதித்து தலையாட்டியது, உணவு பாதுகாப்பு மசோதா, சிறு , குறு வணிகத்தில் அந்நிய முதலீடு, மாநிலங்களைன் காவல்துறை நிர்வாகத்தில் மத்திய உள்துறையின் தலையீடு என்றெல்லாம் மாநில சுயாட்சிக்கு எதிரான அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் முஸ்தீபுகளுக்கு ஒத்தூதியவர்களும் தி.மு.க.வினர் தான்.

அதுமட்டுமல்ல, காவேரி படுகை மண்ணை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் உள்ளிட்ட விபரீத திட்டங்களுக்கு கையெழுத்து போட்ட கண்றாவி கட்சியும் தி.மு.க.தான்.' என்று வரிக்கு வரி வாரியெடுத்து விமர்சித்து தள்ளியுள்ளது.

மரணகுத்துதான்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top