Monday, 21 Sep, 3.26 pm சர்வம் News

அரசியல்
தி.மு.க.வை விரட்டி விரட்டி வேட்டையாடும் அண்ணாமலை: என்னாபா நடக்குது அங்க?

எவனென்று நினைத்தாய்? என்று கமல்ஹாசனின் பட டைட்டில் போல் ஸ்டாலினைப் பார்த்துக் கேட்க துவங்கிவிட்டார் பா.ஜ.க.வின் தமிழக துணைத்தலைவரான அண்ணாமலை. மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது போக்கும், அதிரடியும் தி.மு.க.வை அலற விடுகிறது என்பதில் டவுட்டே இல்லை.

அண்ணாமலை வந்தபோது அவரைப் பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை தி.மு.க. இவர் தீவிர அரசியலுக்கு சரிப்பட்டுவரமாட்டார் இவரால் நமக்குத் தொல்லை இல்லை! என்றுதான் நினைத்தார்கள். ஆனால் நடப்பதோ தலைகீழ்.

அண்ணாமலை என்னமோ அண்ணாமலை படத்து ரஜினிகாந்த், ராதாரவி மற்றும் சரத்பாபுவை சவால் விட்டு வெளுப்பது போல் விரட்டி விரட்டி வேட்டையாடுகிறார். ஆனால் ஆதாரம் மற்றும் அவசியத்தோடு மட்டுமே அதை செய்கிறார் என்பதுதான் ஹைலைட்டு.

இப்போது கூட ஹிந்தியை கட்டாய மொழியாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. தி.மு.க. முன்னணி தலைவர்கள் நடத்தும் 48 பள்ளிகளில்தான் மூன்றாவது மொழியாக ஹிந்தி திணிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதை திசை திருப்புகிறார்கள். என்று வெளுத்திருக்கிறார்.

இதற்கு தங்களின் காஸ்ட்லி பள்ளிகளில் இந்தியை நடத்திக் கொண்டு, ஏழை மற்றும் நடுத்தர வீட்டுப் பிள்ளைகள் அதை பயிலக்கூடாது என்று குரூரபுத்தியுடன் செயல்படுகிறது தி.மு.க. அதேவேளையில், இந்தி திணிப்பு! இந்தி திணிப்பு! என்று கதறி, தமிழகத்தில் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியலில் குளிர்காய நினைக்கிறது. என்று விமர்சித்துள்ளன ஊடகங்கள் சில.

கவனிப்போம்!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top