Saturday, 19 Sep, 12.25 pm சர்வம் News

அரசியல்
திடுதிப்புன்னு ஸ்டாலினை திட்டித் தள்ளிய ராமதாஸ்!: சரமாரியான சந்தோஷத்தில் அ.தி.மு.க.

இந்த முறை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிகளில் மாற்றங்கள் நிகழும்! அநேகமாக பா.ம.க., தி.மு.க.வுடன் இணையும். இதன் மூலம் வி.சி.க. அக்கூட்டணியை விட்டு வெளியேறும் என பெரிதாய் பேசப்பட்டது.

தி.மு.க. மற்றும் பா.ம.க. தரப்புகளில் சிலரது பேச்சுகளும் இதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென ஸ்டாலினை விட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஜூரம் அடிக்க துவங்கிவிட்ட நிலையில் ஸ்டாலின் தினம் தினம் பெரும் கனவில் இருக்கிறார். அது, எதிர்வரும் தேர்தலில் வென்று தான் தமிழக முதல்வர் ஆகிவிடுவோம்! என்பதுதான். அதிலும், இன்னும் எட்டு மாதங்களில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என்று தனக்குத்தானே புலம்பும் வண்ணமும், தேற்றிக் கொள்ளும் வண்ணமும் அவரது பேச்சுகள் இருக்கின்றன என்பதுதான் கொடுமையே.

இந்நிலையில், ஒரு செய்தி சேனலுக்குப் பேட்டி அளித்திருக்கும் டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வையும், ஸ்டாலினையும் லெஃப்டில் விட்டு ரைட்டில் வாங்கி மிக அசால்டாக திட்டித் தீர்த்திருக்கிறார் இப்படி…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு உருவாக்குவோம்!னு சொல்லியிருக்காராம். நீட் தேர்வை இந்தியாவுக்கு கொண்டு வந்ததே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிதான். உண்மை இப்படியிருக்க இப்ப ஏன் இப்படி நாடகம் போடுறார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. அதேமாதிரி தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையில்தான் போட்டி!ன்னு தி.மு.க.வினரே ஒரு கதையை கட்டிகிட்டிருக்காங்க. அப்படியொரு நிலைமையா தமிழ்நாட்டில் இருக்குது? நிச்சயமா இல்லையே!
ஸ்டாலினின் தேர்தல் கனவுகள் எதுவும் பலிக்க வாய்ப்பே இல்லை. என்று கூறியிருக்கிறார்.

டாக்டரின் பேச்சுக்கு பக்கவாத்தியமாய் முழங்கியிருக்கும் அ.தி.மு.க.வோ ஸ்டாலின் டீமின் பொய் பிரசாரத்திற்கு பதிலடியாக மரண அடியை தரக் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். வர இருக்கும் தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத அளவில் அழிந்தே போகும்! என்று திட்டியிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top