Sunday, 20 Sep, 1.56 pm சர்வம் News

அரசியல்
உதயநிதியை நிறுத்த சொல்லுங்க! இல்லேன்னா நிறுத்துவோம்னு சொல்லுங்க: சவால் விட்ட அமைச்சர்.

தி.மு.க.வை திட்டவேண்டுமென்றால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களமிறங்கும் அமைச்சர்களில் முக்கியமானவர் வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார். மனிதர் மைக்கே இல்லையென்றாலும் மணிக்கணக்காய் பேசுவார்.

அவரிடம் வாங்கிக் கட்டுமளவுக்கு வேறு யாரிடம் அவ்வளவு விமர்சையாக தி.மு.க. வாங்கிக் கட்டுமா என்று தெரியவில்லை. தினம் தினம் புதுப்புது ஆங்கிளில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வை வெச்சு வெளுத்தெடுக்கிறார் அமைச்சர்.

அதன் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ….'தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். எங்கள் கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு கருத்துச் சுதந்திரம் முழுவதாய் உள்ளது. அதில் எங்கள் தலைமை தலையிடுவதில்லை. ஒரு கருத்தைச் சொல்வதாலேயே எங்களின் கூட்டணி கட்சி, எங்களோடு முரணில் இருக்கிறது என்று ஸ்டாலின் பேராசை கொள்ள தேவையில்லை. நாங்கள் ஜனநாயகக்த்தையும், சுதந்திரத்தையும் உட்கட்சிக்குள் மட்டுமில்லை கூட்டணியிலும் பேணுகிறோம். உங்களைப் போல அடிமை அரசியல் செய்வதில்லை.

உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் நாகரிகமாக பேச வேண்டும். எப்படி பேசணும்னு அவங்க அப்பாவாச்சும் அவருக்கு பயிற்சி கொடுக்கணும். அப்படி இருந்தால்தான் அது அவரது வளர்ச்சிக்கு உதவியா இருக்கும். இல்லேன்னா ஏற்கனவே இருக்கும் அதலபாதாளா சரிவு, இன்னும் அதிகமாகும். உதயநிதியின் தான்தோண்றித்தனமான பேச்சு தொடர்ந்தால் எங்கள் இயக்கத்தினர் அவருக்கு மிக வலுவான பதிலடி கொடுப்பார்கள். எனவே அநாகரிகமாக பேசுவதை நிறுத்தணும் உதயநிதி.

எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, எங்களின் ஆட்சி வளர்ச்சிக்கான ஆட்சி. ஆனால் ஒருவரோ வீட்டில் அமர்ந்து கொண்டு ஒன்றிணைவோம் வா! என்று தனது கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் பற்றி சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால்….காணாமல் போன கட்சிக்கு காணொலியில் கூட்டம் நடத்துகிறார்! என்று போட்டுப் பொளந்திருக்கிறார்.

இதற்கு தி.மு.க. தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top