Thursday, 15 Oct, 6.29 am சர்வம் News

அரசியல்
வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய ஐபேக்! கலக்கத்தில் திமுக தலைமை!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியலைக் கற்றுக்கொடுப்பதற்காக 380 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள திமுக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீதான, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளது.

திமுகவுக்கு ஐடியா மணியாக பிரசாந்த் கிஷோரை நியமித்ததை வெளிப்படையாகக் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து வாய் திறக்கவே இல்லை. ஆனாலும் அவருக்கு 380 கோடி கொடுக்கப்பட்டதை அவரது கட்சிக்காரர்களே வெளிப்படையாகப் புலம்பித் தள்ளிவிட்டார்கள்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், முறையாக வருமான வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மீது, வருமான வரி துறைக்கு, வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, வருமான வரி அதிகாரிகள், 'தி.மு.க.,விற்காக பணியாற்றி வரும், பிரசாந்த் கிஷோர் மீது, டில்லியில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில், சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, டி.ராமாராவ் மற்றும் ஆர்.முருகேசன் ஆகியோர், வரி ஏய்ப்பு புகார் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த, சென்னையில் உள்ள, வருமான வரி புலனாய்வு துறைக்கு, டில்லியில் இருந்து கடிதம் வந்துள்ளது. புகார் தொடர்பாக, வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள உள்ளனர். விசாரணை முடிவில், வரி ஏய்ப்பு செய்துள்ளாரா; அதில் தி.மு.க., தொடர்பு இருக்கிறா என்பது குறித்து தெரியவரும்' என்று கூறினார்கள்.

ஏற்கனவே 2ஜி சிக்கலில் மாட்டித்தவிக்கும் திமுக, வரி ஏய்ப்பு பிரச்சனையில் மாட்டும் நிலையில் உள்ளதால் திமுக தலைமை பெரும் கலக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது!

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top