Monday, 21 Sep, 4.00 pm சர்வம் News

அரசியல்
விவசாயிகளின் நண்பன் யார்?: அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க.

இந்த தேர்தலில் மட்டுமில்லை எந்த தேர்தலிலும் விவசாயிகளின் வாக்கு வங்கி யாரை அதிகம் ஆதரிக்கிறாதோ அக்கட்சியே வெற்றி பெறும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும். அதனால்தான் ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளின் அன்பை பெற முயலுகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டதிருத்த மசோதாவானது விவசாயிகளுக்கு எதிரானது என்று சொல்லி குரல் கொடுத்து விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறது தி.மு.க. அதேவேளையில் அ.தி.மு.க.வோ , ஒரு காலத்திலும் விவசாயிகளுக்கு எதிராக தாங்கள் போக மாட்டோம் என்று சொல்லி விவசாயிகளின் அன்பை தக்க வைக்கப் பார்க்கிறது.

இதற்குப் பல உதாரணங்களையும் சொல்கின்றனர் அ.தி.மு.க.வினர். அதாவது மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டதுமே அதை மிக கடுமையாக எதித்தது ஆளும் அ.தி.மு.க. அரசு. முதல்வர் எடப்பாடியாரும், மின்சார துறை அமைச்சர் தங்கமணியும் மிகவும் பவ்யமாகவும், ஆணித்தரமாகவும் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் எங்கள் உழவர்கள் உள்ளம் நொந்துவிடுவார்கள் என்று கோரிக்கை வைத்து போராடினர்.

அதே அமைச்சர் தங்கமணி இப்போது தமிழகத்தில் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், மின்சார பயன்பாட்டுக்கு மீட்டர் வைக்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் ஏற்கனவே கூறி, விவசாயிகளின் நலனை காத்திருக்கிறார். மேலும் எந்த ஒரு சூழலிலும் விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை முதலமைச்சர் ஆதரித்து, அதன் சாதக அம்சங்களை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த திட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறுவதற்காக இந்த திட்டம் குறித்து தவறான தகவல்களை வழங்குகின்றனர். நம் முதலமைச்சரே ஒரு விவசாயிதான். எனவே எந்த சூழலிலும் தமிழக விவசாயிகளின் நலனில் ஒரு துரோக துரும்போ, வேதனை தூசியோ விழ விடமாட்டார். என்று தி.மு.க.வை திட்டி, தங்கள் கட்சியின் புகழ் பாடியுள்ளார்.

ஆனால் இதற்குப் பதிலடி தரும் தி.மு.க.வோ நீங்கள் விவசாயிகளின் நண்பனா? ஏன் அமைச்சரே காமெடி பண்றீங்க? சேலத்திலிருந்து சென்னை வரை எட்டு வழிச்சாலை எனும் பெயரில் பல்லாயிரம் விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வயிற்றில் பாய்ஸனை வார்த்தவர்கள் நீங்கள். நீங்களெல்லாம் விவசாயிகளின் நன்மை பற்றிப் பேசுவதா? என்கிறார்கள்.

ம்ம்ம்……..விவசாயிகளின் ஆதரவு யாருக்கோ?

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sarvam News
Top