Dailyhunt
சுந்தர் .சி தயாரிப்பில் பிரசன்னா, ஷாம்

சுந்தர் .சி தயாரிப்பில் பிரசன்னா, ஷாம்

screen4screen 5 years ago

டைரக்டர் சுந்தர்.C யின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

'ஹலோ நான் பேய் பேசுறேன்', முத்தின கத்திரிக்கா', 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் இது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமானது.

பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்பட்டது.

அதனால் பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு.

'வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு' போன்ற படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார்.
சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: screen4screen