Dailyhunt
2 வாரங்களில் அதிரடி வளர்ச்சி...! 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை...! - மத்திய அரசு

2 வாரங்களில் அதிரடி வளர்ச்சி...! 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை...! - மத்திய அரசு

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்களின் இயக்கத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ள நிலையிலும், நாட்டில் எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாக மத்திய எண்ணெய் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் முக்கிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

அதில், மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி மையங்கள் மூலம் 6.6 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினசரி சராசரியாக 51 லட்சம் 14.2 கிலோ எடையுடைய எல்பிஜி சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இதில் சுமார் 95 சதவீதம் சிலிண்டர்கள் ஆன்லைன் முன்பதிவின் மூலம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும், சிலிண்டர்களை பதுக்கி வைத்திருக்கும் விநியோக மையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50,000 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறிய 1,400 எல்பிஜி விநியோக மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், 36 விற்பனையாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன், வீடுகளில் பயன்படும் எல்பிஜி சமையல் எரிவாயு எந்தவித தட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து கிடைக்கிறது என அமைச்சகம் தெரிவிக்கப்படுகின்றது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal