Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆச்சருக்கு முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டாச்சர்; முதலாவது T20 சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ள 15 வயது பாலகன் வைபவ் சூர்யவன்ஷி ..!

ஆச்சருக்கு முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டாச்சர்; முதலாவது T20 சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ள 15 வயது பாலகன் வைபவ் சூர்யவன்ஷி ..!

ந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 05 போட்டி கொண்ட டி.20 தொடர் மற்றும் 03 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் டி.20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இன்று 02-வது போட்டி மான்செஸ்டரில் இரவு 07 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் தனது வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மறுபுறம் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றபடி அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை. இரு அணிகளும் இன்று டி.20-இல் 32-வது முறையாக மோத உள்ளன.

இதற்கு முன் மோதிய 31 போட்டியில் 18-இல் இந்தியாவும், 12 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் இங்கிலாந்து இதுவரை 13 டி.20 போட்டியில் ஆடி 07இல் வெற்றிப்பெற்றுள்ளதோடு, 03 தோல்விகளை பெற்றுள்ளது.

03 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் 02 போட்டிகளில் ஆடி, ஒரு வெற்றி, ஒரு தோல்வி என உள்ளது.

இன்றைய போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் இருந்த நிலையில், தற்போது ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் தனது முதலாவது சர்வதேச ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகியுள்ளார்.

19 உலக கோப்பை போட்டியில் கலக்கியதோடு, ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டார். கடைசியாக இலங்கைக்கு எதிரான A அணியில் இடம்பெற்று பல விமர்சனங்களை இலங்கை ரசிகர்களால் எதிர்கொண்டாலும் இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுத்து 11 பந்துகளில் 50 ரன்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஆச்சரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal